நதியோடும் கரையோரம் பாடல் வரிகள்

Last Updated: Feb 02, 2023

Movie Name
Aavarampoo (1992) (ஆவாரம் பூ)
Music
Ilaiyaraaja
Year
1992
Singers
S. Janaki
Lyrics
Pulamaipithan
பெண் : நதியோடும் கரையோரம்
ஒரு ராகம் அலை பாயும்
அதிலே இரு உயிரே
தினம் கரையும்

பெண் : நதியோடும் கரையோரம்
ஒரு ராகம் அலை பாயும்
அதிலே இரு உயிரே
தினம் கரையும்

பெண் : நினைவோ வெறும் கனவோ
இது எதுவோ….ஓ….
காதல் வரும் யார்க்கும்
இந்த பாதை பொதுவோ

பெண் : நதியோடும் கரையோரம்
ஒரு ராகம் அலை பாயும்
அதிலே இரு உயிரே
தினம் கரையும்
அதிலே இரு உயிரே
தினம் கரையும்

பெண் : பல கோலம் போடும்
வானம் மாறும் தடுமாறும்
புது ராகம் பாடும்
காற்றோ சோகம் பாடும்

பெண் : பனி தூங்கும் பூவின் தோற்றம்
ஏனோ அதில் மாற்றம்
பகல் கூட இரவாய் தோன்றும்
பாதை மாறும்

பெண் : {காதல் என்பது காலம் எங்கிலும்
காத்து நின்றிடவோ
ஆசை என்பது ஆடி காற்றினில்
ஒடி சென்றிடவோ} (2)

பெண் : உறவே வெறும் கனவே
வரும் நினைவே பழம் கதையே
கனவே என தெரிந்தும்
மனம் நினைக்கும் அதையே….

பெண் : நதியோடும் கரையோரம்
ஒரு ராகம் அலை பாயும்
அதிலே இரு உயிரே
தினம் கரையும்

பெண் : இளம் காதல் ஆசை நெஞ்சில்
ஏக்கம் அது தாக்கும்
இரவென்ன பகலும் என்ன
தூக்கம் போகும்

பெண் : பிரிவேதும் அறியா நெஞ்சில்
உருவானது பாரம்
உறவென்னும் உணர்வால்
இங்கே உயிரே பாரம்

பெண் : {மோகம் என்பது வேகம் உள்ளது
வேலி போட்டிடவோ
வேலி போட்டொரு காதல் தீ
என்னை பாதுகாத்திடவோ} (2)

பெண் : விதியால் ஒரு சதியால்
இரு வழியாய் திசை பிரிந்தோம்
ஒரு நாள் அது திருநாள்
ஒரு உணர்வால் இணைவோம்

பெண் : நதியோடும் கரையோரம்
ஒரு ராகம் அலை பாயும்
அதிலே இரு உயிரே
தினம் கரையும்

பெண் : நினைவோ வெறும் கனவோ
இது எதுவோ….ஓ….
காதல் வரும் யார்க்கும்
இந்த பாதை பொதுவோ

பெண் : நதியோடும் கரையோரம்
ஒரு ராகம் அலை பாயும்
அதிலே இரு உயிரே
தினம் கரையும்
அதிலே இரு உயிரே
தினம் கரையும்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.