ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது பாடல் வரிகள்

Movie Name
Thaaya Thaarama (1989) (தாயா தாரமா)
Music
Shankar-Ganesh
Year
1989
Singers
Mano, P. Susheela
Lyrics
Pulamaipithan
ஆண் : ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது
ஆனந்தம் கண்ணோரம் நீர்த் தூவுது
என் மனதிலும் உன் மனதிலும் தேன் வழிகிறது
வான் எதுவரை நாம் அதுவரை
போய் வருவது கல்யாண ஊர்கோலம்

பெண் : ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது
ஆனந்தம் கண்ணோரம் நீர்த் தூவுது
என் மனதிலும் உன் மனதிலும் தேன் வழிகிறது
வான் எதுவரை நாம் அதுவரை
போய் வருவது கல்யாண ஊர்கோலம்

ஆண் : ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது

ஆண் : ஒட்டிக்கொண்டொரு ரெட்டை மாங்கனி
தொட்டில் ஆடுதடி
ஒத்துக் கொள் எனைக் கட்டிக்கொள் என
கட்டில் தேடுதடி

பெண் : பட்டுப் போல் உடல் தொட்டுப் பாத்ததும்
வெட்கம் வந்ததுவே
எட்டிப் போகையில் ஒட்டிக்கொள் என
உள்ளம் சொன்னதுவே

ஆண் : விழிகளில் நவரசம் இதழ்களில் மதுரசம்
பெண் : மனதினில் பரவசம் தினம் தினம் இலவசம்
ஆண் : வானம் பூமி சேரும் நேரம் நாம் சேரலாம்

பெண் : ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது
ஆண் : ஆனந்தம் கண்ணோரம் நீர்த் தூவுது
பெண் : என் மனதிலும் உன் மனதிலும் தேன் வழிகிறது
ஆண் : வான் எதுவரை நாம் அதுவரை
போய் வருவது கல்யாண ஊர்கோலம்

பெண் : ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது

பெண் : மெத்தைக்கும் சுக வித்தைக்கும்
ஒரு தத்தை ஏங்கியதே
விண்ணுக்குள் வரும் சொர்க்கத்தை இது
மண்ணில் தேடியதே

ஆண் : ஆஹா தித்திக்கும் ஒரு முத்தத்தில்
மனம் தேனில் ஊறியதே
முத்தத்தில் வரும் சத்தத்தில்
ஒரு மோகம் ஏறியதே

பெண் : விரல்களும் விரல்களும்
இணைவதில் ஒரு சுகம்
ஆண் : விழிகளும் விழிகளும்
கலப்பதில் ஒரு சுகம்
பெண் : காதல் தீபம் கண்கள்
ரெண்டில் நீ கொண்டு வா

ஆண் : ஆகாயம் எங்கெங்கும் பூத்தூவுது
பெண் : ஆனந்தம் கண்ணோரம் நீர்த் தூவுது
ஆண் : என் மனதிலும் உன் மனதிலும் தேன் வழிகிறது
பெண் : வான் எதுவரை நாம் அதுவரை
போய் வருவது கல்யாண ஊர்கோலம்
இருவரும் : லாலாலலலாலா.....லாலலாலா...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.