அந்தபுரத்தில் ஒரு மகராணி பாடல் வரிகள்

Last Updated: Feb 02, 2023

Movie Name
Dheepam (1977) (தீபம்)
Music
Ilaiyaraaja
Year
1977
Singers
S. Janaki, T. M. Soundararajan
Lyrics
Pulamaipithan
அந்தபுரத்தில் ஒரு மகராணி
அவள் அன்புக் கரத்தில் ஒரு மகராஜன்
அந்தபுரத்தில் ஒரு மகராணி
அவள் அன்புக் கரத்தில் ஒரு மகராஜன்
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள் 

சாமந்திப் பூக்கள் மலர்ந்தன

இரு சந்தன தேர்கள் அசைந்தன 

சாமந்திப் பூக்கள் மலர்ந்தன

இரு சந்தன தேர்கள் அசைந்தன

பாவை இதழிரண்டும் கோவை

அமுத ரசம் தேவை

என அழைக்கும் பார்வையோ

அந்தபுரத்தில் ஒரு மகராஜன்
அவன் அன்புக் கரத்தில் ஒரு மகராணி 
ஆசை கனிந்து வர அவன் பார்த்தான்
அன்னம் தலை குணிந்து நிலம் பார்த்தாள்

சங்கு வண்ண கழுத்துக்குத் தங்க மாலை
அவள் சங்கமத்தின் சுகத்திற்கு அந்தி மாலை
சங்கு வண்ண கழுத்துக்குத் தங்க மாலை
அவள் சங்கமத்தின் சுகத்திற்கு அந்தி மாலை

குங்குமத்தின் இதழ் சின்னம் கண்ட காளை
அவன் கொள்ளை கொள்ள துடித்தது 
என்ன பார்வை

அது பார்வை அல்ல பாஷை என்று 
கூறடி என்றாள்

அந்தபுரத்தில் ஒரு மகராஜன் 
அவன் அன்புக் கரத்தில் ஒரு மகராணி

கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்

முத்துச் சிப்பி பிறந்தது விண்ணைப் பார்த்து

மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து

முத்துச் சிப்பி பிறந்தது விண்ணைப் பார்த்து

மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து

பித்தம் ஒன்று வளர்ந்தது முத்தம் கேட்டு

அவன் நெஞ்சில் வந்து பிறந்திடும் 
தொட்டில் பார்த்து

அந்தி தென் பொதிகை தென்றல் வந்து
ஆரிரோ பாடும்

அந்தபுரத்தில் ஒரு மகராஜன்
அவள் அன்புக் கரத்தில் ஒரு மகராணி

கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்

ஆராரிரோ...

ஆராரி ராராரிரோ...

ராரிராரோ ஆராரிரோ...

ஆராரிரோ...

ஆராரிரோ...

ஆராரிரோ...

ஆராரிரோ...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.