நீ என்னென்ன சொன்னாலும் பாடல் வரிகள்

Movie Name
Netru Indru Naalai (1974) (நேற்று இன்று நாளை)
Music
M. S. Viswanathan
Year
1974
Singers
P. Susheela, S. P. Balasubramaniam
Lyrics
Pulamaipithan
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
நீ என்னென்ன செய்தாலும் புதுமை
உனை எங்கெங்கு தொட்டாலும் இளமைஇனிமை... இளமை...


சின்னஞ்சிறு மலர் பனியினில் நனைந்து
என்னைக் கொஞ்சம் வந்து தழுவிட நினைந்து
முல்லைக் கொடியென கரங்களில் வளைந்து
முத்துச்சரமென குறு நகை புரிந்து

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
நீ என்னென்ன செய்தாலும் புதுமை
உனை எங்கெங்கு தொட்டாலும் இளமைஇனிமை... இளமை...


பொன்னில் அழகிய மனதினை வரைந்து
பொங்கும் தமிழினில் கவிதைகள் புனைந்து
பன்னீர் புதுமலர் இதழ்களில் நனைந்து
கங்கை நதியென உறவினில் கலந்து
உறவினில் கலந்து...

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
நீ என்னென்ன செய்தாலும் புதுமை
உனை எங்கெங்கு தொட்டாலும் இளமைஇனிமை... இளமை...வெள்ளிப் பனிமலை அருவியில் விழுந்து
வெற்றித் திருமகன் மடியினில் கிடந்து
உள்ள சுகத்தினை முழுவதும் அளந்து
இந்த உலகினை ஒரு கணம் மறந்து
ஒரு கணம் மறந்து...

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
நீ என்னென்ன செய்தாலும் புதுமை
உனை எங்கெங்கு தொட்டாலும் இளமைஇனிமை... இளமை...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.