ராஜா யுவராஜா பாடல் வரிகள்

Movie Name
Dheepam (1977) (தீபம்)
Music
Ilaiyaraaja
Year
1977
Singers
T. M. Soundararajan
Lyrics
Pulamaipithan
ராஜா... யுவராஜா
நாள் தோறும் ஒரு ரோஜா
ராஜா... யுவராஜா
நாள் தோறும் ஒரு ரோஜா
சரசா ரீட்டா கங்கா ரேகா
சரசா ரீட்டா கங்கா ரேகா பாமா...

ராஜா... யுவராஜா
நாள் தோறும் ஒரு ரோஜா

நித்தம் ஒரு புத்தம் புது நெஞ்சில் உறவாடும்
பழக்கம் எனதல்லாவா
நேரம் ஒரு ராகம் சுக பாவம் அதில் நாளும்
மிதக்கும் மனதல்லவா
தினம் ஒரு திருமணம் நடக்கலாம்
சுகம் அதில் உலகினை மறக்கலாம்
என் தேவை பெண் பாவை கண் ஜாடை

ராஜா... யுவராஜா
நாள் தோறும் ஒரு ரோஜா

தங்கம் அது தங்கம்
உடல் எங்கும் அதை கண்டால்
கடத்தும் நினைவு வரும்
தஞ்சம் இள நெஞ்சம் 
ஒரு மஞ்சம் அது தந்தால் 
எதிரில் சொர்க்கம் வரும்
அடிக்கடி வலது கண் துடிக்குது
புதுப் புது வரவுகள் இருக்குது
எந்நாளும் என் மோகம் உன் யோகம் 

ராஜா... யுவராஜா
நாள் தோறும் ஒரு ரோஜா

ஒன்றா அது ரெண்டா
அது சொன்னால் ஒரு கோடி
ரசித்து சுவைத்தவன் நான்
உன் போல் ஒரு பெண் பால் 
விழி முன்னால் வரக் கண்டால்
மயக்கிப் பிடிப்பவன் நான்
நடிப்பிலே யவரையும் மயக்குவேன்
அணைப்பிலே கலைகளை விளக்குவேன்
என் ராசி பெண் ராசி நீ வாவா

ராஜா... யுவராஜா
நாள் தோறும் ஒரு ரோஜா...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.