நான் சிரித்தால் தீபாவளி பாடல் வரிகள்

Movie Name
Nayakan (1987) (1987) (நாயகன் )
Music
Ilaiyaraaja
Year
1987
Singers
K. Jamuna Rani, M. S. Rajeswari and chorus
Lyrics
Pulamaipithan
நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி

அந்தி மலரும் நந்தவனம் நான் அல்லி பருகும் கம்பரசம் நான்
நான் சிரித்தால் …

எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை
இங்கு இரவும் பகலும் என்னவென்று தோணவில்லை

வந்தது எல்லாம் போவது தானே சந்திரன் கூட தேய்வது தானே
காயம் என்றால் தேகம் தானே உண்மை இங்கே கண்டேன் நானே
காலம் நேரம் போகும் வா
நான் சிரித்தால் ..
நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி
அந்தி மலரும் நந்தவனம் நான் அல்லி பருகும் கம்பரசம் நான்
நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி

கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது
அலை கரையை கடந்து எப்பொழுது ஏரியது
கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது
அலை கரையை கடந்து எப்பொழுது ஏரியது
யார் விரல் என்றா வீணைகள் பார்க்கும் யார் இசைத்தாலும் இன்னிசை பாடும்
மீட்டும் கையில் நானோர் வீணை வானில் வைரம் மின்னும் வேலை
காலம் நேரம் போகும் வா
நான் சிரித்தால் …
நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி
அந்தி மலரும் நந்தவனம் நான் அல்லி பருகும் கம்பரசம் நான்
நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.