அன்பே வா அழைக்கும் முன்பே வா பாடல் வரிகள்

Movie Name
Dravidan (1989) (திராவிடன்)
Music
M. S. Viswanathan
Year
1989
Singers
Mano, Suja Radhakrishnan
Lyrics
Pulamaipithan
பெண் : அன்பே வா அழைக்கும் முன்பே வா
அன்பே வா அழைக்கும் முன்பே வா
வெண் பஞ்சு மேகம் எங்கெங்கு போகும்
வெண் பஞ்சு மேகம் எங்கெங்கு போகும்
அதில் நாமும் போவோம் இங்கே வா

உந்தன் நினைவோடு இன்பக் கனவோடு
நித்தம் தவித்தேனே நெஞ்சம் துடித்தேனே
இது வானும் மண்ணும் சேரும் நேரம் வா வா வா
அன்பே வா அழைக்கும் முன்பே வா

ஆண் : ஹே ஹம் தும் சே பியார் கரேங்கே
துனியா சே ஹம் நஹி டரேங்கே
சோனே கா தில் சான்ஸா முக்குடா
தும் சாசா தில் கஹா முலேகா

பெண் : ஏதேதோ இன்பக் கனவு
என் கண்ணில் கோடி நிலவு
நீ தந்தாய் காதல் உறவு
வேறென்ன வாழ்வில் வரவு

பௌர்ணமி ராவில் நிலாவில் உலாவும் சுகங்கள்
பாவை என் வாழ்வில் பதக்கம் பதிக்கும் நகங்கள்
இனி நாளும் சந்திப்போம் மணநாளை சிந்திப்போம்
இது வாடைக் காற்றில் வாடும் ரோஜா வா வா வா
அன்பே வா அழைக்கும் முன்பே வா

பெண் : கண்ணோடு வந்து நுழைந்தாய்
நெஞ்சோடு வந்து நிறைந்தாய்
என்னோடு ஒன்று கலந்தாய்
இதழோடு தேனைப் பொழிந்தாய்

வாடையில் வாடும் மனத்தின் கொதிப்பை அணைப்பாய்
பூவிழித் தேடும் சுகத்தை எடுத்து கொடுப்பாய்
இரு கைகள் பின்னட்டும் அதில் மின்னல் மின்னட்டும்
இனி நானும் நீயும் தேனும் பாலும் வா வா வா

பெண் : அன்பே வா அழைக்கும் முன்பே வா
வெண் பஞ்சு மேகம் எங்கெங்கு போகும்
அதில் நாமும் போவோம் இங்கே வா

உந்தன் நினைவோடு இன்பக் கனவோடு
நித்தம் தவித்தேனே நெஞ்சம் துடித்தேனே
இது வானும் மண்ணும் சேரும் நேரம் வா வா வா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.