அச்சம் என்பது மடமையடா பாடல் வரிகள்

Movie Name
Dravidan (1989) (திராவிடன்)
Music
M. S. Viswanathan
Year
1989
Singers
T. M. Soundararajan
Lyrics
Pulamaipithan
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா..ஆஆஆ...
அஞ்சாமை திராவிடர் உடமையடா

ஏன் என்ற கேள்வி ஒன்று கேட்டேன்
இன்று ஞாயம் பிறந்தது
ஏன் என்ற கேள்வி ஒன்று கேட்டேன்
இன்று ஞாயம் பிறந்தது

நான் உங்கள் தோழன் உண்மை தொண்டன்
என்னும் சொந்தம் வளர்ந்தது
நான் உங்கள் தோழன் உண்மை தொண்டன்
என்னும் சொந்தம் வளர்ந்தது

கொடுப்பதை கொடுத்தப்பின்
இங்கு தர்மம் ஜெயித்தது
கொடுப்பதை கொடுத்தப்பின்
இங்கு தர்மம் ஜெயித்தது

பதவி அதிகாரம் பார்த்து வணங்காமல்
நீதிக்கு தலை வணங்கு
பாடுபடுகின்ற உங்கள் உழைப்பாலே
வாழ்வது நம்நாடு ( 2 )

ஏழை எளியோர்கள் வாழ நானென்றும்
ஊருக்கு உழைப்பவன்
இமயம் தடுத்தாலும் இதயம் கலங்காமல்
நினைத்ததை முடிப்பவன்

ஏன் என்ற கேள்வி ஒன்று கேட்டேன்
இன்று ஞாயம் பிறந்தது..

எங்கள் தென்னாடு இனிய பொன்னாடு
இன்று போல என்றும் வாழ்க
கடமை மறக்காமல் உரிமை இழக்காமல்
நீங்கள் பல்லாண்டு வாழ்க ( 2 )

நீதியென்ற கப்பல் கரை சேர
நாமே கலங்கரை விளக்கம்
அச்சம் தள்ளுங்கள் ஆண்மை கொள்ளுங்கள்
நிச்சயம் நாளை நமதே

ஏன் என்ற கேள்வி ஒன்று கேட்டேன்
இன்று ஞாயம் பிறந்தது
நான் உங்கள் தோழன் உண்மை தொண்டன்
என்னும் சொந்தம் வளர்ந்தது
கொடுப்பதை கொடுத்தப்பின்
இங்கு தர்மம் ஜெயித்ததுஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.