மகனே மகனே கண்ணுறங்கு பாடல் வரிகள்

Movie Name
Varam (1989) (வரம்)
Music
M. S. Viswanathan
Year
1989
Singers
P. Susheela
Lyrics
Pulamaipithan
மகனே மகனே கண்ணுறங்கு
மழலை கிளியே கண்ணுறங்கு
கனவும் வராமல் அமைதி கெடாமல்
கண்ணே நீ உறங்கு கொஞ்சம் உன்னை நீ மறந்து

கஸ்தூரி மான் ஒன்று கண்ணுறங்கும் நேரம்
கார்க்கால மேகங்கள் தாலாட்டு பாடும் உஷ்....
பேசக்கூடாது யாரும் பேசக்கூடாது
ஆரிராரிரோ...ஆரிராரிரோ....

நாடாளும் ராஜாங்கம் உன்னை வந்து தேடும்
பாராட்டி தோளோடு பூமாலை சூடும்
நாடாளும் ராஜாங்கம் உன்னை வந்து தேடும்
பாராட்டி தோளோடு பூமாலை சூடும்

பட்டாளம் நீ சொல்லும் கட்டளையை கேட்கும்
பாசத்தில் என் கண்கள் பன்னீரை வார்க்கும்
ஏழு ஜென்மங்கள் வாழும் இந்த இன்பங்கள்
ஆரிராரிரோ...ஆரிராரிரோ....

மகனே மகனே கண்ணுறங்கு
மழலை கிளியே கண்ணுறங்கு
கனவும் வராமல் அமைதி கெடாமல்
கண்ணே நீ உறங்கு கொஞ்சம் உன்னை நீ மறந்து

கல்யாண நாளொன்று நாளை வந்து சேரும்
பாராட்டும் மேளங்கள் பல்லாண்டு பாடும்
கல்யாண நாளொன்று நாளை வந்து சேரும்
பாராட்டும் மேளங்கள் பல்லாண்டு பாடும்

அன்பான நெஞ்சங்கள் உன்னை வந்து வாழ்த்தும்
ஆனந்த கண்ணீரில் என் உள்ளம் நீந்தும்
போகும் ஊர்க்கோலம் அங்கே வானம் பூத்தூவும்
ஆரிராரிரோ...ஆரிராரிரோ....

மகனே மகனே கண்ணுறங்கு
மழலை கிளியே கண்ணுறங்கு
கனவும் வராமல் அமைதி கெடாமல்
கண்ணே நீ உறங்கு கொஞ்சம் உன்னை நீ மறந்து...

கஸ்தூரி மான் ஒன்று கண்ணுறங்கும் நேரம்
கார்க்கால மேகங்கள் தாலாட்டு பாடும் உஷ்....
பேசக்கூடாது யாரும் பேசக்கூடாது
ஆரிராரிரோ...ஆரிராரிரோ....ஆரிராரிரோ....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.