வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும் பாடல் வரிகள்

Last Updated: Feb 06, 2023

Movie Name
Varam (1989) (வரம்)
Music
M. S. Viswanathan
Year
1989
Singers
Vani Jayaram, P. Jayachandran
Lyrics
Vairamuthu
ஆண் : வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும்
காதல் வைபோகம்
மழையும் அடிக்க வெய்யிலும் அடிக்க
இங்கே கல்யாணம்

வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும்
காதல் வைபோகம்
மழையும் அடிக்க வெய்யிலும் அடிக்க
இங்கே கல்யாணம்


பெண் : காதல் மாலை சூடும் வேளை
கண்ணில் கார்காலம்
காதல் மாலை சூடும் வேளை
கண்ணில் கார்காலம்..


ஆண் : கண்ணே உந்தன் கன்னம் ரெண்டில்
கண்ணீர் ஊர்கோலம்
கண்ணே உந்தன் கன்னம் ரெண்டில்
கண்ணீர் ஊர்கோலம்..

வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும்
காதல் வைபோகம்..
மழையும் அடிக்க வெய்யிலும் அடிக்க
இங்கே கல்யாணம்..ஆஆஆஆ......


ஆண் : வானிலிருந்து பூக்கள் தூவ
தேவர் வரவில்லையே..
பெண் : வசந்த கால பூவை தூவி
வாழ்த்தும் கொடி முல்லையே..ஏ..
வாழ்த்தும் கொடி முல்லையே..

ஆண் : வானிலிருந்து பூக்கள் தூவ
தேவர் வரவில்லையே..ஏ..
பெண் : வசந்த கால பூவை தூவி
வாழ்த்தும் கொடி முல்லையே..ஏ...
வாழ்த்தும் கொடி முல்லையே

ஆண் : வரம்பு கடந்து நரம்பு துடிக்கும்
இங்கே சுவரில்லையே..
பெண் : வளர்ந்த கொடிகள் திரைகளானால்
ஒன்றும் தவறில்லையே
வளர்ந்த கொடிகள் திரைகளானால்
ஒன்றும் தவறில்லையே

ஆண் : வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும்
காதல் வைபோகம்..
மழையும் அடிக்க வெய்யிலும் அடிக்க
இங்கே கல்யாணம்


பெண் : காட்டுக் குயில்கள் பாட்டுப் பாடி
லாலி படிக்கின்றது..
ஆண் : அருவி பொழிந்து தரையில் விழுந்து
மேளம் அடிக்கின்றது...மேளம் அடிக்கின்றது

பெண் : காட்டுக் குயில்கள் பாட்டுப்பாடி
லாலி படிக்கின்றது..
ஆண் : அருவி பொழிந்து தரையில் விழுந்து
மேளம் அடிக்கின்றது..மேளம் அடிக்கின்றது

பெண் : பாலும் பழமும் பருகவில்லை
பந்தி நடக்கின்றது
ஆண் : நாலும் நடந்து முடிந்த பின்னும்
நாணம் இருக்கின்றது..
நாலும் நடந்து முடிந்த பின்னும்
நாணம் இருக்கின்றது..

பெண் : வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும்
காதல் வைபோகம்...ம்...
ஆண் : மழையும் அடிக்க வெய்யிலும் அடிக்க
இங்கே கல்யாணம்

பெண் : காதல் மாலை சூடும் வேளை
கண்ணில்.. கார்காலம்
ஆண் : கண்ணே உந்தன் கன்னம் ரெண்டில்
கண்ணீர் ஊர்கோலம்
கண்ணே உந்தன் கன்னம் ரெண்டில்
கண்ணீர் ஊர்கோலம்.....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.