ஓ பார்ட்டி நல்ல பாடல் வரிகள்

Last Updated: Feb 02, 2023

Movie Name
Idhayam (1991) (இதயம்)
Music
Ilaiyaraaja
Year
1991
Singers
Malaysia Vasudevan
Lyrics
Vairamuthu
ஆண் : ஓ... பார்ட்டி நல்ல பார்ட்டி தான்
ஓ பியூட்டியின்னா பியூட்டி தான் (இசை)

ஆண் : ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்
ஓ பியூட்டியின்னா பியூட்டி தான்
ஆண்குழு : ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்
ஓ பியூட்டியின்னா பியூட்டி தான்
ஆண் : பின்னழகைக் காட்டிச் சின்னப் பையன்களை வாட்டி
மின்னலிடை ஆட்டி செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே...

ஆண்குழு : ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்
ஓ பியூட்டியின்னா பியூட்டி தான்

***

ஆண் : காத்திருந்தா கண்மணியே பஸ் கிடைக்கும்
ஆண்குழு : காதலிச்சா பொன்மணியே கிஸ் கிடைக்கும்
ஆண் : கை விடுவான் கன்னியரைப் பல்லவந்தான்
ஆண்குழு : கைக்கொடுப்போம் நாங்களெல்லாம் நல்லவன் தான்
ஆண் : நிழல் போல் நாங்கள் வந்தாலே உனக்கேன் கூச்சமே
கடைக்கண் பார்வை பட்டாலே கிடைக்கும் மோட்சமே
ஆண்குழு : தரையிலொரு ஜலதரங்கம் ஆண் : ஆ....
ஆண்குழு : தவறி விட்டால் சுதி இறங்கும்
ஆண் : உன்னை வாலிபந்தான் கூப்பிடுது வானவில்லே வா வா

ஆண்குழு : ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்
ஓ பியூட்டியின்னா பியூட்டி தான்
ஆண் : பின்னழகைக் காட்டிச் சின்னப் பையன்களை வாட்டி
மின்னலிடை ஆட்டி செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே
ஆண்குழு : ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்
ஓ பியூட்டியின்னா பியூட்டி தான்
ஆண்குழு : லால லா..லலலால லால லா...
லால லா..லலலால லால லா...
லா லால லா... லல லா லால லா...
லால லால லால லால லா....

***

ஆண்குழு : பிள்ளைகளை நீ சுமக்கும் பருவமடி
ஆண் : பூக்ஸை எல்லாம் நீ சுமந்தால் பாவமடி
ஆண்குழு : பள்ளியறைப் பாடம் சொல்ல நாங்க ரெடி
ஆண் : பூங்குயில் நீ சம்மதிச்சா போதுமடி
ஆண் : அடியே ஆடைகளாலே அழகைப் பூட்டாதே
இடையை ஆடவிட்டே தான் அனலை மூட்டுதே
ஆண்குழு-1: பூஞ்சிரிப்பில் மோனலிசா ஆண் : ஆ....
ஆண்குழு-1: போலிருந்தும் கல் மனசா
ஆண் : இளமீசை வெச்ச ஆம்பளைங்க ஆச வச்சோம் வா வா

ஆண்குழு : ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்
ஓ பியூட்டியின்னா பியூட்டி தான்
ஆண் : பின்னழகைக் காட்டிச் சின்னப் பையன்களை வாட்டி
மின்னலிடை ஆட்டி செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே
ஆண்குழு : ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்
ஓ பியூட்டியின்னா பியூட்டி தான்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.