கண்ணுக்கு மை அழகு பாடல் வரிகள்

Movie Name
Puthiya mugam (1993) (புதிய முகம்)
Music
A. R. Rahman
Year
1993
Singers
P. Susheela
Lyrics
Vairamuthu
கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு
அவரைக்கு பூ அழகு அவருக்கு நான் அழகு
கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு
அவரைக்கு பூ அழகு அவருக்கு நான் அழகு

மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளி அழகு
அலை மீண்டு போனாலும் கரை கொண்ட நுரை அழகு
இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடு தான் அழகு
இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடு தான் அழகு
இளமாறன் கண்ணுக்கு எப்போதும் நான் அழகு

கண்ணுக்கு மை அழகு... (2)

ஆனந்த மஞ்சத்தில் அவிழ்ந்தாலும் குழலழகு
அடையாள முத்தத்தில் அழிந்தாலும் பொட்டழகு
பெண்ணோடு காதல் வந்தால் பிறை கூட பேரழகு
பெண்ணோடு காதல் வந்தால் பிறை கூட பேரழகு
என்னோடு நீ இருந்தால் இருள் கூட ஓர் அழகு

கண்ணுக்கு மை அழகு... (2)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.