பொன்னம்மா ஏ பொன்னம்மா பாடல் வரிகள்

Movie Name
Vaai Kozhuppu (1989) (வாய்க்கொழுப்பு)
Music
Chandrabose
Year
1989
Singers
Mano, Lalitha Sagari
Lyrics
Vairamuthu
ஆண் : பொன்னம்மா ஏ பொன்னம்மா
சொல்லம்மா நீ சொல்லம்மா
அங்கங்க உனக்கு மச்சங்கள் இருக்கு
ஆளான கிளியே அச்சங்கள் எதுக்கு

பெண் : பொன்னய்யா ஏ பொன்னய்யா
சொல்லய்யா நீ சொல்லய்யா
மனச தொறந்தா உன் பேரு இருக்கு
மலர்ந்த கொடிக்கு மாராப்பு எதுக்கு

ஆண் : பொன்னம்மா ஏ பொன்னம்மா
பெண் : பொன்னய்யா ஏ பொன்னய்யா

ஆண் : தொட்டதெல்லாம் வெற்றியென்று ஜெயிச்சேனே
தூண்டிலிட்டு திமிங்கலம் புடிச்சேனே
பெண் : கட்டழகன் குட்டை என்று நினைத்தேனே
கண்ணியத்தில் நெட்டை என்று களித்தேனே

ஆண் : பெண்ணே பேதை என்று நினைக்காதே
விண்ணை ஏணி வைத்து தொடுவேனே
பெண்ணே பேதை என்று நினைக்காதே
விண்ணை ஏணி வைத்து தொடுவேனே

பெண் : பொன்னய்யா ஏ பொன்னய்யா
ஆண் : சொல்லம்மா நீ சொல்லம்மா
பெண் : மனச தொறந்தா உன் பேரு இருக்கு
ஆண் : ஆளான கிளியே அச்சங்கள் எதுக்கு

பெண் : பொன்னய்யா ஏ பொன்னய்யா
ஆண் : சொல்லம்மா நீ சொல்லம்மா

பெண் : எங்களுக்கு வெற்றியொன்றும் புதுமையில்லை
சிங்கத்துக்கு விட்டு தந்து பழக்கமில்லை
ஆண் : காற்றடித்து வெண்ணிலவு கரைவதில்லை
கையில் உள்ள வெற்றிக்கொடி விழுவதில்லை

பெண் : வானம் நீளம் கொஞ்சம் குறைந்தாலும்
எங்கள் வாழ்க்கை ஒன்றும் குறைவதில்லை
வானம் நீளம் கொஞ்சம் குறைந்தாலும்
எங்கள் வாழ்க்கை ஒன்றும் குறைவதில்லை

ஆண் : பொன்னம்மா ஏ பொன்னம்மா
சொல்லம்மா நீ சொல்லம்மா
அங்கங்க உனக்கு மச்சங்கள் இருக்கு
ஆளான கிளியே அச்சங்கள் எதுக்கு

பெண் : பொன்னய்யா ஏ பொன்னய்யா
சொல்லய்யா நீ சொல்லய்யா
மனச தொறந்தா உன் பேரு இருக்கு
மலர்ந்த கொடிக்கு மாராப்பு எதுக்கு

ஆண் : பொன்னம்மா ஏ பொன்னம்மா
பெண் : பொன்னய்யா ஏ பொன்னய்யா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.