ஏதேதோ கற்பனை வந்து பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Vaai Kozhuppu (1989) (வாய்க்கொழுப்பு)
Music
Chandrabose
Year
1989
Singers
T. L. Maharajan, Lalitha Sagari
Lyrics
Vairamuthu
ஆண் : ஏதேதோ கற்பனை வந்து
என்னை அழைக்கிறதே
எங்கேயோ விண்ணில் பறக்க
ரெக்கை முளைக்கிறதே
கண்களிலே கைகளிலே
காதலி தாவணி மோதிய போது

பெண் : ஏதேதோ கற்பனை வந்து
என்னை அழைக்கிறதே
எங்கேயோ விண்ணில் பறக்க
ரெக்கை முளைக்கிறதே
கண்களிலே கைகளிலே
காதலன் கை விரல் தீண்டியபோது

ஆண் : ஏதேதோ கற்பனை வந்து
என்னை அழைக்கிறதே
பெண் : எங்கேயோ விண்ணில் பறக்க
ரெக்கை முளைக்கிறதே..

ஆண் : பூவென்பது ஆளானது ஆள் தேடுது ஆத்தாடி
நான் வந்ததும் நாள் வந்தது தேன் சிந்துது அம்மாடி
பெண் : என் கண்களும் என் மேனியும்
நீ பார்த்திடும் கண்ணாடி
ஓராயிரம் பூ மாலைகள் தோள் சேரணும் அம்மாடி;;

ஆண் : அடி காதல் கண்ணம்மா பிடிவாதம் என்னம்மா
அடி காதல் கண்ணம்மா பிடிவாதம் என்னம்மா
பெண் : முதலிரவென்பது முதல் முறை வருவது
அவசரப்படலாமா....

ஆண் : ஏதேதோ கற்பனை வந்து
என்னை அழைக்கிறதே
பெண் : எங்கேயோ விண்ணில் பறக்க
ரெக்கை முளைக்கிறதே
ஆண் : கண்களிலே கைகளிலே
காதலன் கைவிரல் தீண்டிய போது

ஆண் : ஏதேதோ கற்பனை வந்து
என்னை அழைக்கிறதே
பெண் : எங்கேயோ விண்ணில் பறக்க
ரெக்கை முளைக்கிறதே...

பெண் : உன் பார்வையில் சூடானவள் ஓராயிரம் சிந்தித்தாள்
காதல் வர மோகம் பெற காமன் கணை சந்தித்தாள்
ஆண் : பூச் சூடவும் தோள் சேரவும் பொன் மாங்கனி சிந்தித்தாள்
மோகம் ஒரு ராகம் தர நாளும் என்னை சந்தித்தாள்

பெண் : தடுமாற கூடாது கரை மீறக் கூடாது
தடுமாற கூடாது கரை மீறக் கூடாது
ஆண் : காவிரி அடியில் ஓடிடும் வேளையில்
கரைகளை கேளாது.....

பெண் : ஏதேதோ கற்பனை வந்து
என்னை அழைக்கிறதே..ம்ம்ம்ம்...
எங்கேயோ விண்ணில் பறக்க
ரெக்கை முளைக்கிறதே..ம்ம்ம்ம்
கண்களிலே கைகளிலே
காதலன் கை விரல் தீண்டியபோது

ஆண் : ஏதேதோ கற்பனை வந்து
என்னை அழைக்கிறதே..ஆஅஹ்..
எங்கேயோ விண்ணில் பறக்க
ரெக்கை முளைக்கிறதே..ஹஹாஹ்
கண்களிலே கைகளிலே
காதலி தாவணி மோதிய போது

பெண் : ஏதேதோ கற்பனை வந்து
என்னை அழைக்கிறதே
ஆண் : எங்கேயோ விண்ணில் பறக்க
ரெக்கை முளைக்கிறதே.....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.