சின்ன சின்ன பூவே பாடல் வரிகள்

Movie Name
Shankar Guru (1987) (சங்கர் குரு)
Music
Chandrabose
Year
1987
Singers
S. Janaki
Lyrics
Vairamuthu

ஆண் : லலலல....லலலல...ஆஆஆ...ஓஓஒ...
சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும்
சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும்
தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும்
கண்ணே உன் கை பட்டால் காஞ்ச கொடி பிஞ்சு விடும்
பட்ட மரம் பாலூறும் பாகற்காய் தேனூறும்.. ஓ..ஓ..ஓஹோ

பெண் : சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும்
தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும்

ஆண் : உலகத்தில் பூவெல்லாம் உன் போல அழகில்ல
நானும் உன் அம்மாவும் பண்ணாத தவமில்ல
தென் பாண்டி மன்னவனோ முழுகித்தான் முத்தெடுத்தான்
தேனே உன் அம்மாவோ முழுகாம முத்தெடுத்தா
கண்ணே தெய்வம் கண்டேன் உந்தன் கண்ணில் சன்னிதி
உன் முத்தம் பட்டு எச்சில் பட்டா கொஞ்சம் நிம்மதி.......

ஆண் : சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும்
பெண் : தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும்

ஆண் : பாப்பா நீ இல்லாம பசி தூக்கம் வாரது
உன் பேச்ச கேக்காம ஒரு நாளும் விடியாது
நீ உண்ண பால் கிண்ணம் போதாது பொன் மானே
நிலவென்னும் கிண்ணத்தை நான் கொண்டு வருவேனே
பூவும் பூவும் உன்ன பார்த்து பேசிக் கொண்டது
இந்த காட்டில் ஓடும் ஒடை கூட உன் பேர் சொன்னது

பெண் : சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும்
தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும்
ஆண் : கண்ணே உன் கை பட்டால் காஞ்ச கொடி பிஞ்சு விடும்
பட்ட மரம் பாலூறும் பாகற்காய் தேனூறும்.. ஓ..ஓ..ஓஹோ

சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும்
தொட்டு தொட்டு பேசு என் துன்பம் எல்லாம் தீரும்...
தன்னன்னானதானா......தன்னன்னானதானா......

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.