ரோஜா காடு சுடிதார் பாடல் வரிகள்

Movie Name
Red (2002) (ரெட்)
Music
Deva
Year
2002
Singers
Hariharan
Lyrics
Vairamuthu
ரோஜா காடு சுடிதார் போட்டு
மதுரை வீதியில் வந்தா
அட மனம் குதிக்குது பந்தா
கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா
தீயாய் இருந்தேனடா திரியாய் வந்தாளடா
கலக்கும் காட்டறாரு நான் கரையே அவள் தானடா
ரோஜா காடு சுடிதார் போட்டு
Ho baby Ho baby Ho baby ho…

அழகு பெண்ணழகு ஆயிரம் தான் இருக்குதடி
ஆனா என் மனசு உன் மடியில் விழுந்ததடி
ஓ.. பிடிச்சது முன்னழகோ பின்னழகோ இல்லையடி
அதுக்கும் மேல ஒரு தாயழகும் உள்ளதடி
அவள பொண்ணு கேட்டு போடப் போறேன் தாலி
திருப்பரங்குன்றத்து கோயிலிலே
மேல மாசி வீதி வர மேல சத்தம் கேட்கும்
மூணு மோடி போடும் வேளையிலே
வீட்டுக்குள்ளே பாய் போடுவேன்
பிள்ளை பெத்து வெளியேறுவேன்

ரோஜா காடு சுடிதார் போட்டு
மதுரை வீதியில் வந்தா
அட மனம் குதிக்குது பந்தா
கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா
தீயாய் இருந்தேனடா திரியாய் வந்தாளடா
கலக்கும் காட்டறாரு நான் கரையே அவள் தானடா

அவள மனம் முடிச்சி அரசர் அடியில் குடியிருப்பேன்
வேர்த்தா அழகர் மலை காத்த கொஞ்சம் திருப்பி வெப்பேன் .
மதுரை மல்லிகை பூ வண்டி கட்டி வாங்கி வருவேன்
மேட்டினிக்கு டைடானிக் இங்கிலீஷ் படம் பாக்க வெப்பேன்
செம்பவள விரல் விட்டு நகம் விழுந்தாலும்
அத ஒரு முத்தா வெச்சிருப்பேன்
பட்டு வண்ண கூந்தல் விட்டு முடி விழுந்தாலும்
பரம்பரை சொத்தா வெச்சிருபேன்
மடியில் சீராட்டுவேன் விடிந்தும் வாலாட்டுவேன்

ரோஜா காடு சுடிதார் போட்டு
மதுரை வீதியில் வந்தா
அட மனம் குதிக்குது பந்தா
கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா
தீயாய் இருந்தேனடா திரியாய் வந்தாளடா
கலக்கும் காட்டறாரு நான் கரையே அவள் தானடா
ரோஜா காடு சுடிதார் போட்டு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.