பட்டு சட்டை போட்டு வந்த மைனா உன்ன பாடல் வரிகள்

Last Updated: Jan 29, 2023

Movie Name
Sonthakkaran (1989) (சொந்தக்காரன்)
Music
Chandrabose
Year
1989
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vairamuthu
பட்டு சட்டை போட்டு வந்த மைனா உன்ன
தொட்டுத் தொட்டு பேசப்போறான் நைனா
துள்ளித் துள்ளி வந்திருக்கும் மீனா மீனா
தூண்டிலிலே சிக்க வந்த மீனா இங்கே நீயா நானா...

பட்டு சட்டை போட்டு வந்த மைனா உன்ன
தொட்டுத் தொட்டு பேசப்போறான் நைனா..நைனா

நானா ஒரு பெண்ணை வலை வீசி
தொட்டுப் பார்த்ததும் இல்லை
தானா ஒண்ணு வந்தா விடமாட்டேன்
அதில் தோத்ததும் இல்லை

பொண்ணுங்க இல்லாவிட்டா பூமியும் இல்லை
பொண்டாட்டி இல்லாமத்தான் சாமியும் இல்ல
காதலின்றி வாழும் வாழ்க்கை மெய்யல்ல..வா

பட்டு சட்டை போட்டு வந்த மைனா உன்ன
தொட்டுத் தொட்டு பேசப்போறான் நைனா
துள்ளித் துள்ளி வந்திருக்கும் மீனா மீனா
தூண்டிலிலே சிக்க வந்த மீனா இங்கே நீயா நானா...

மண்ணில் நின்று கொண்டு அந்த
விண்ணில் ஒரு தோட்டம் அமைப்பேன்
விண்ணில் நின்று கொண்டு இந்த
மண்ணில் ஒரு கோட்டை அமைப்பேன்

ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடி முடிப்பேன்
ஆனாலும் காதலுக்கு காது கொடுப்பேன்
முத்தம் என்ற பாடம் இன்று கற்பிப்பேன்

பட்டு சட்டை போட்டு வந்த மைனா மைனா
தொட்டுத் தொட்டு பேசப்போறான் நைனா நைனா
துள்ளித் துள்ளி வந்திருக்கும் மீனா மீனா
தூண்டிலிலே சிக்க வந்த மீனா இங்கே நீயா நானா...

பட்டு சட்டை போட்டு வந்த மைனா உன்ன
தொட்டுத் தொட்டு பேசப்போறான் நைனா....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.