கோடம்பாக்கம் விருகம்பாக்கம் பக்கம் போவோமா பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Sonthakkaran (1989) (சொந்தக்காரன்)
Music
Chandrabose
Year
1989
Singers
S. P. Balasubramaniam, S. P. Sailaja
Lyrics
Vairamuthu
ஆண் : கோடம்பாக்கம் விருகம்பாக்கம் பக்கம் போவோமா
பெண் : நந்தம்பாக்கம் மீனம்பாக்கம் பக்கம் போவோமா
ஆண் : கோடம்பாக்கம் விருகம்பாக்கம் பக்கம் போவோமா
பெண் : நந்தம்பாக்கம் மீனம்பாக்கம் பக்கம் போவோமா

ஆண் : எந்தப்பக்கம் போனாலென்ன சொர்க்கம் சொர்க்கம்தான்
பெண் : அக்கம் பக்கம் பாத்துவிட்டால் வெக்கம் வெக்கம்தான்
ஆண் : கோடம்பாக்கம் விருகம்பாக்கம் பக்கம் போவோமா
பெண் : நந்தம்பாக்கம் மீனம்பாக்கம் பக்கம் போவோமா

பெண் : கண்ணை தொட்டாய் கையைத் தொட்டாய்
இன்னும் எங்கே பாக்கி என்று எல்லை மீறாதே
ஆண் : மோகம் தந்தாய் முத்தம் தந்தாய்
இன்னும் கொஞ்சம் மிச்சம் உண்டு வார்த்தை மாறாதே

பெண் : அம்ப விட்டு வம்பு பண்ணாதே
ஆண் : தும்ப விட்டு வாலத் தொடாதே
பெண் : மாலை போடும் முன்னே நீயும் தொல்லை பண்ணாதே

ஆண் : சொல்லு கோடம்பாக்கம் விருகம்பாக்கம் பக்கம் போவோமா
பெண் : நந்தம்பாக்கம் மீனம்பாக்கம் பக்கம் போவோமா

ஆண் : எந்தப்பக்கம் போனாலென்ன சொர்க்கம் சொர்க்கம்தான்
பெண் : அக்கம் பக்கம் பாத்துவிட்டால் வெக்கம் வெக்கம்தான்
ஆண் : சொல்லு கோடம்பாக்கம் விருகம்பாக்கம் பக்கம் போவோமா
பெண் : நந்தம்பாக்கம் மீனம்பாக்கம் பக்கம் போவோமா

ஆண் : மாலை சூடும் பத்தாம் மாதம்
கட்டில் ஒன்று குட்டிப் போட்டு தொட்டில் உண்டாகும்
பெண் : தொட்டில் ஒன்று வந்த பின்னே
காதல் வேகம் கூடாதய்யா கட்டில் ரெண்டாகும்

ஆண் : ஹாங் அப்போதும் நான் அள்ளிக் கொடுப்பேன்
பெண் : ஹஹாங் ஆனாலும் நான் தள்ளிப் படுப்பேன்
ஆண் : தொட்டில் ஆட்டி தூங்க வைக்க
சொல்லிக் கொடுப்பேன்

பெண் : சொல்லு கோடம்பாக்கம் விருகம்பாக்கம் பக்கம் போவோமா
ஆண் : நந்தம்பாக்கம் மீனம்பாக்கம் பக்கம் போவோமா

பெண் : எந்தப்பக்கம் போனாலென்ன சொர்க்கம் சொர்க்கம்தான்
ஆண் : அக்கம் பக்கம் பாத்துவிட்டால் வெக்கம் வெக்கம்தான்
ஆண் : சொல்லு கோடம்பாக்கம் விருகம்பாக்கம் பக்கம் போவோமா
பெண் : நந்தம்பாக்கம் மீனம்பாக்கம் பக்கம் போவோமா....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.