அழைகட்டுமா பாடல் வரிகள்

Movie Name
Kanne Kalaimaane (2019) (கண்ணே கலைமானே)
Music
Yuvan Shankar Raja
Year
2019
Singers
Lyrics
Vairamuthu
பச்ச வய காட்டுக்குள்ள
புங்க மரம் பூத்திருக்கு
நாள் வழி சாலையில
புளிய மரங்களுமே பூத்திருக்கு

எட்டு திக்கு எங்கும்
எங்க வேப்ப மரமும் பூத்திருக்கு
நீ வர போகும் நேரம் பார்த்து
பூத்த பூவெல்லாம் கண் முழிச்சு காத்திருக்கு

ஆத்துல வந்தவளே வைகை ஆத்துல வந்தவளே
எங்க சோழவந்தான் மாரியம்மா
உன்ன அன்போடு அழைக்கட்டுமா
அன்போடு அழைக்கட்டுமா

அழைகட்டுமா தாயே அழைகட்டுமா
அந்த அருகம்புல்லு மாலைகாரி
அழைகட்டுமா தாயே அழைகட்டுமா
நம்ம வெயிலு வந்த மாரியம்மன
அழைக்கட்டுமா ஓடியா ஆத்தா

வன்னி மரம்பிழந்து என் ஆத்தாளுக்கு
வன்னி ஒன்னு மரம்பிழந்து
என் தாய கொண்டு செல்ல
வாகான பெட்டி செஞ்சான்

அந்தவன பெட்டிக்குள்ள
என் அஞ்சனமையில் காரியே
அங்க அடங்காத கோவக்காரி

எங்க சோழவந்தான் மாரியம்மன
எப்படி அடசான் தெரியுமா

அங்க மச்சனம்மா பூசிகாரி அழைக்கட்டுமா
அந்த மரிகொழுந்து ஆட்டக்காரி அழைக்கட்டுமா
அங்க செப்பு நல்ல சிலை அழகி அழைக்கட்டுமா
அந்த சிங்கார உடை அழகி
அழைக்கட்டுமா ஓடியா ஆத்தா

நாட்டுல பஞ்சம் பசின்னு ஏதும் இல்லாம
பட்டினியா கெடந்திருக்கும் வேலையில
இந்த மக்கள் எல்லாம் கூடி நிற்கும் போது
என்ன செய்வோம் என்று சொல்லி

அன்று யோசித்து பார்க்கும்போது
அந்த அனந்த மல மாய கண்ணன்
அந்த வர்ண பகவான அழைச்சி டோய்
அடிச்சு பெய்த மழையின்னு சொல்றான்

அங்க அடிச்சதோர் புயல் மழையாம்
என் ஆத்தாள் பெட்டி மேல் கிளம்பா
அந்த பால் ஆத்து தண்ணியில
அந்த தேன் ஆத்து தண்ணியில


நம்ம சோழவந்தான் ஆத்துகுள்ள
உன் பெட்டியுமே ஒதுங்குதம்மா
என்ன இது பெட்டி என்று
ஏறிட்டு பார்க்கும் போது
என் செல்ல மக மாரியம்மா பெட்டியம்மா

பெட்டியில வந்தவளே அழைக்கட்டுமா
அந்த பேரும் புகழ் பெற்றவளே அழைக்கட்டுமா
பெட்டியில வந்தவளே அழைக்கட்டுமா
அந்த பேரும் புகழ் பெற்றவளே அழைக்கட்டுமா

எங்க எங்க சோழவந்தான் மாரியம்மா ஆத்தா
எங்க எங்க சோழவந்தான் மாரியம்மா அழைக்கட்டுமா
எங்க சொர்ணமுத்து மாரியம்மன அழைக்கட்டுமா
எங்க சொர்ணமுத்து மாரியம்மன அழைக்கட்டுமா ஆத்தா

பெட்டி வந்துருச்சு அப்பா
என் மக்கள் எல்லாம் கூடி
நின்னுருச்சு அப்பா
என்ன இது பெட்டின்னு சொல்லி
பாக்க பயமா இருக்குன்னு சொல்லி

யோசிச்சு பார்க்கும்போது
ஆஹா பெட்டியில தங்கம் இருக்குமோ
இல்ல வைரம் இருக்குமோ
இல்ல ஏதோ இருக்கும்னு சொல்லி

யோசித்து பார்க்கும் போது
நம்ம தாய் பெட்டிடா
நம்ம சோழவந்தான் காத்த
மாரி பெட்டிடான்னு சொல்லி

எடுத்து நம்ம மக்கள் எல்லாம்
சாதிசனம் எல்லாம் கூடி வெச்சு
பார்க்கும் போது

வருஷ வருஷம் கெளரிக்கு
ஆத்தாளுக்கு கொழுவாக
அமர்ந்திருக்கும் வெளியில
இந்த மக்களுக்கெல்லாம் எப்படி
காட்சி தர தெரியுமா

அவளுக்கு 21 தெய்வங்களும் ஹேய்
அங்க 61 பந்திகளும்
அத்தனைக்கும் காவக்காரன்
எங்க 18ஆம் படி கருப்பன்
எப்படி காவகாக்குறான் தெரியுமா

அங்க பாக்க பயமா இருக்குது
கருப்ப சாமி
பக்கம் வந்தா புல்லரிக்குது
அங்க பாக்க பயமா இருக்குது
கருப்ப சாமி
பக்கம் வந்தா புல்லரிக்குது

வெள்ள நல்ல குதிரையில
வீச்சருவா கொண்டுகிட்டு
வெள்ள நல்ல குதிரையில
வீச்சருவா கொண்டுகிட்டு
வெள்ள நல்ல குதிரையில
வீச்சருவா கொண்டுகிட்டு

வெளையாடி ஆடி வாரான்
வெளையாடி ஆடி வாரான்
கோட்ட கருப்ப சாமி

பாக்க பாக்க பாக்க
பாக்க பயமா இருக்குது
கருப்ப சாமி
பக்கம் வந்து புல்லரிக்குது

ஓடி வா கருப்பா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.