Song lyrics

Maya Machindra Lyrics

மாயா மச்சிந்தா பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
A. R. Rahman
Year
1996
Singers
S. P. Balasubramaniam, Swarnalatha
Lyricist
Vairamuthu
Maya Machindra

Lyrics

Maya Machindra Lyrics

பெண் : மாயா மச்சீந்திரா
மச்சம் பார்க்க வந்தீரா
மாயங்கள் காட்டி
மோசம் செய்யும் மாவீரா

ஆண் : மாறன் கலைக்கூடம்
மஞ்சத்தில் உருவாக்கும்
மேஸ்திரி காதல் சாஸ்திரி

பெண் : மார்பில் விளையாட
மன்னன் கை விசைப் போட
ராத்திரி அடச்சீ போக்கிரி

ஆண் : உருமாறி உருமாறி
ஓவியப்பெண் உனைத் தேடி
வருவேனே வாரித் தருவேனே

பெண் : தடை தாண்டும் படை வீரா
உடையாக அணிவீரா தம்பூரா
மீட்டும் கிங்கரா

ஆண் : உனை நானும் அணையாது
விழி வாசல் அடையாது
கஞ்சிரா தட்டக் கொஞ்சிறா
மாயா மச்சீந்திரா
மச்சம் பார்க்க வந்தாரா
மாயங்கள் காட்டி

பெண் : மோசம் செய்யும் மாவீரா

===

பெண் : உன்னை நான் சந்தித்தால்
உள்ளத்தில் தித்தித்தை
தகதிமித் தகதிமித் தாளம்

ஆண் : உன்னை நான் சிந்தித்தால்
உண்டாகும் தித்திப்பை
உதடுக்குள் பொத்தி வைத்தேன் நாளும்

பெண் : பொத்தி வைத்த தித்திப்பை நீ தந்தாலென்ன
முத்தமிட்டு சர்க்கரை நோய் வந்தாலென்ன

ஆண் : தினமும் தினமும் வரலாமா
தவணை முறையில் தரலாமா
சொல்லடி சோன் பப்படி

பெண் : செயலில் இறங்கு சீக்கிரமா
மீனம் மேஷம் பாக்கணுமா
மென்னுடா என்னைத் தின்னுடா

ஆண் : மாயா மச்சீந்திரா
மச்சம் பார்க்க வந்தாரா

பெண் : மாயங்கள் காட்டி
மோசம் செய்யும் மாவீரா

====

ஆண்குழு : செய்...செய்..செய்..

பெண்குழு : தரத் தரத் தரத் த்ரத்த தரத் த்ரத்த (இசை)

பெண் : அன்பே என் பேரென்ன
நான் வாழும் ஊரென்ன
அறியாமல் உன்னைக் கேட்டேன் நானே

ஆண் : பெண்ணே என் பேச்செங்கே
நான் வாங்கும் மூச்செங்கே
புரியாமல் தவிக்கின்றேன் மானே

பெண் : காதலுக்குக் கேள்விக் கேட்டு மாளாதைய்யா
காமனுக்கு தாமதங்கள் ஆகாதைய்யா

ஆண் : கனலில் பனியாய் கரைவோமா
கரைந்தே கவிதை வரைவோமா
சுட்டியே கண்ணுக் குட்டியே

பெண் : உனையும் எனையும் புணைவோமா உலகப்
படமாய் தருவோமா அஜ்ஜி மா செல்ல புஜ்ஜி மா

ஆண் : மாயா மச்சீந்திரா
மச்சம் பார்க்க வந்தாரா

ஆண்குழு : ஹூஹை ஹூஹை ஹூஹை ஹூஹை...
ஹூஹை ஹூஹை ஹூஹை ஹூஹை

ஆண் : மாயங்கள் காட்டி மோசம் செய்யும் மாவீரா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people