ஓர் மிருகம் பாடல் வரிகள்

Movie Name
Paradesi (2013) (பரதேசி)
Music
G. V. Prakash Kumar
Year
2013
Singers
Lyrics
Vairamuthu
யாத்தே கால கூத்தே வாழ்வே பழுதாச்சே
ஏழை பாடு பார்த்தே காடும் அழுதாச்சே

ஓர் மிருகம் ஓர் மிருகம் தன்னை,
தன்னடிமை செய்வதும் இல்லை
ஓர் மனிதன் ஓர் அடிமை என்றால்
அது மனிதன் செய்யும் வேலை

யாத்தே கால கூத்தே வாழ்வே பழுதாச்சே

தாழ் போன வீடு, கால் போன ஆடு
ஒன்னோட ஒன்னா துணையானதேன்
தாய் போல நெஞ்சு, தாளாத அன்பு
மழைத் தண்ணியோடு மாசில்லையே

வழி சொல்லவே
இல்லையே வாய்மொழி
கண்ணீரு தான்
ஏழையின் தாய்மொழி

எங்கோ தவிக்கும் உன் பிள்ளையே
இங்கே உறவு என் பிள்ளையே

கை கொண்ட நெல்லு உமியாகும் போது
கத்தாழை சோறும் சோறாகுமே
உண்டான சொந்தம் உடைகின்ற போது
இல்லாத சொந்தம் உறவாகுமே

ஒரு சீவனோ உறவிலே சேருதே
இரு சீவனோ ஒத்தையில் வாடுதே
கண்ணீர் துடைக்க ஆளில்லையே
காலம் நடக்கும் காலில்லையே
(யாத்தே கால)

ஓர் மிருகம் ஓர் மிருகம்
தன்னை, தன்னடிமை செய்வதும் இல்லை
ஓர் மனிதன் ஓர் அடிமை என்றால்
அது மனிதன் செய்யும் வேலை

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.