மாயா மாயா பாடல் வரிகள்

Movie Name
Baba (2002) (பாபா)
Music
A. R. Rahman
Year
2002
Singers
Benny Dayal, Karthik, Sujatha Mohan
Lyrics
Vairamuthu
மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா

மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா

சந்தோஷி சந்தோஷி சந்தோஷி
நீ சந்தோஷம் கொண்டாடும் சந்நியாசி

சந்தோஷி சந்தோஷி சந்தோஷி
உன் சந்தோஷம் உன் கையில் நீ யோசி

பட்டும் படாமலே
தொட்டும் தொடாமலே

தாமரை இலை தண்ணீர் போல் நீ
ஒட்டி ஒட்டாமலிரு (2)

வாசனை இருக்கும் வரையினில் சிரிக்கும்
பூக்களின் கதை தான் பூமியில் நமக்கும்
உலகினில் எதுவும் நிரந்தரம் இல்லை
உறங்கிடும் வரையில் சுதந்திரம் இல்லை
அவனவன் சொல்வான் ஆயிரம் சேதி
அளப்பவன் பேர்தான் அரசியல் வாதி
அதுக்கென்ன செய்ய அது அந்த பதவியின் வியாதி 
உனது கை கால்களே
உதவும் நண்பர்களே
திரைகடல் மேல எண்ணை துளியினை போல்
நீ ஒட்டி ஒட்டாமலிரு

காற்றே போ காற்றே போ
என் காதலனை கண்டு பிடி
கண்ணீரில் கண்ணீரில்
நான் வரைந்த கடிதம் படி
மாயை போல் சாயை போல்
காதல் உறவு ஓர் நாளும் ஆவதில்லை
உணர்வோடும் உயிரோடும்
வாழும் அழகு பொய்யாகி போவதில்லை
காற்றே போ காற்றே போ
என் காதலனை கண்டு பிடி

பட்டும் படாமலே
கொஞ்சம் பரவாயில்லை
தொட்டும் தொடாமலே
ஒருநாள் இதமா இல்லை

தாமரை இலை தண்ணீர் போல் நீ
ஒட்டி ஒட்டாமலிரு

தாமரை இலை தண்ணீர் போல்

நீ என்னை எண்ணாமல் இரு

சந்தோஷி சந்தோஷி சந்தோஷி
நீ என்னோடு ஒன்றானால் சம்சாரி
சந்தோஷி சந்தோஷி சந்தோஷி
நீ தொட்டால் நான் பொன்னாவேன் உன் ராசி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.