திமிங்கலத்தை முழுங்கிபுட்டு பாடல் வரிகள்

Movie Name
Sonthakkaran (1989) (சொந்தக்காரன்)
Music
Chandrabose
Year
1989
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vairamuthu
திமிங்கலத்தை முழுங்கிபுட்டு
திருட்டு முழி முழிக்கறவன்
பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா
பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா

தூணுக்கெல்லாம் பொடவக் கட்டி
தொட்டுத் தொட்டுப் பாக்கிறவன்
பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா
பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா

இவனுக்கெல்லாம் பொம்பளைங்க புத்தி புகட்டணும்
வெளக்குமாத்து பூசையெல்லாம் கத்துக் கொடுக்கணும்
திமிங்கலத்தை முழுங்கிபுட்டு
திருட்டு முழி முழிக்கறவன்
பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா
பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா

ஹைத்தலக்கா ஹைத்தலக்கா
ஹைத்தலக்கா பாட்டுப்பாடி
டப்பாங்குத்து ஆடுவோம்
ஹைத்தலக்கா பாட்டுப்பாடி
டப்பாங்குத்து ஆடுவோம் ஆடுவோம்
ஆடுவோம் ஆடுவோம் ஆடுவோம்...போடு....

கள்ளநோட்டு பேர்வழிதான் இந்த ஆளுங்க
கர்ப்பத்தையே கடத்துவாரு இந்த ஆளுங்க
கள்ளநோட்டு பேர்வழிதான் இந்த ஆளுங்க
கர்ப்பத்தையே கடத்துவாரு இந்த ஆளுங்க

இவர் சாராயத்தில் சர்க்காரையே நடத்தினானுங்க
இவர் சேலை சப்ளை பண்ணுவதில் சிறந்த ஆளுங்க
சுதந்திரத்தை இவங்கதானே எடுத்துக்கிட்டாங்க
இருட்டுக்குள்ளே பங்கு போட்டு பிரிச்சிகிட்டாங்க
இருட்டுக்குள்ளே பங்கு போட்டு பிரிச்சிகிட்டாங்க

திமிங்கலத்தை முழுங்கிபுட்டு
திருட்டு முழி முழிக்கறவன்
பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா
பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா

அடிக்க அடிக்க குனியுறது அந்த நாளுங்க
அடிச்ச பந்து திரும்பி வரும் இந்த நாளுங்க
அடிக்க அடிக்க குனியுறது அந்த நாளுங்க
அடிச்ச பந்து திரும்பி வரும் இந்த நாளுங்க

ஒழைச்சு ஒழைச்சு தேஞ்சதெல்லாம் அந்த நாளுங்க
ஒழைச்ச கூட்டம் ஆளுவது இந்த நாளுங்க
கொள்ளைக்கார கூட்டணிக்கு ஓட்டு ஏதுங்க
கொஞ்ச நாளில் உங்க கூட்டம் மாட்டப் போதுங்க
கொஞ்ச நாளில் உங்க கூட்டம் மாட்டப் போதுங்க..போடு

திமிங்கலத்தை முழுங்கிபுட்டு
திருட்டு முழி முழிக்கறவன்
பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா
பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா

தூணுக்கெல்லாம் பொடவக் கட்டி
தொட்டுத் தொட்டுப் பாக்கிறவன்
பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா
பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா

இவனுக்கெல்லாம் பொம்பளைங்க புத்தி புகட்டணும்
வெளக்குமாத்து பூசையெல்லாம் கத்துக் கொடுக்கணும்
திமிங்கலத்தை முழுங்கிபுட்டு
திருட்டு முழி முழிக்கறவன்
பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா
பெரிய மனுஷனா தம்பி பெரிய மனுஷனா...
அட போடு.....ஹாய் ஹை ஹாய்....ஹாய்.....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.