கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் பாடல் வரிகள்

Movie Name
Sonthakkaran (1989) (சொந்தக்காரன்)
Music
Chandrabose
Year
1989
Singers
S. Janaki
Lyrics
Vairamuthu
கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன்
சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன்
சின்ன ராஜாங்கம் ஒண்ணு கட்டிக் கொடுப்பேன்
எந்தன் ராணிக்கு வைரம் கொட்டிக் கொடுப்பேன்
என்னை நம்புங்கள் புன்னகை சிந்துங்கள்

கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன்
சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன்

வண்ண நிலவு என்ன விலை விலையென்று
வாங்கி வருவேன் கண்ணே கண்ணே
வானவெளியில் நட்டு வச்ச நட்சத்திரம்
கொட்டித் தருவேன் பெண்ணே பெண்ணே

திரைக்கடல் பல ஓடி திரவியம் எடுப்பேன்
கடலுக்குள் ஒரு வீடு கட்டித் தர நினைப்பேன்
பட்டணத்தில் சென்று நான் கப்பல் கட்டுவேன்
என் பத்தினிக்கும் பிள்ளைக்கும் பட்டம் கட்டுவேன்

கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன்
சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன்
சின்ன ராஜாங்கம் ஒண்ணு கட்டிக் கொடுப்பேன்
எந்தன் ராணிக்கு வைரம் கொட்டிக் கொடுப்பேன்
என்னை நம்புங்கள் புன்னகை சிந்துங்கள்

கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன்
சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன்....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.