உன்னோடு நான் இருந்த பாடல் வரிகள்

Movie Name
Iruvar (1997) (இருவர்)
Music
A. R. Rahman
Year
1997
Singers
Arvind Swamy
Lyrics
Vairamuthu
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே
தொன்னூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான்
என்னூறு ஆண்டுகளாய் இதயத்தில் கலங்குதடி
பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைதபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே

எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை
யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை
அச்சம் களைந்தேன் ஆசையினை நீ அணைத்தாய்
ஆடை களைந்தேன் வெட்கத்தை நீ அணைத்தாய்
கண்ட திருகோலம் கனவாக மறைந்தால்
கடைசியிலே அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.