கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் பாடல் வரிகள்

Last Updated: Jan 29, 2023

Movie Name
Sonthakkaran (1989) (சொந்தக்காரன்)
Music
Chandrabose
Year
1989
Singers
S. P. Balasubramaniam, S. Janaki
Lyrics
Vairamuthu
பெண் : கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன்
சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன்
சின்ன ராஜாங்கம் ஒண்ணு கட்டிக் கொடுப்பேன்
எந்தன் ராணிக்கு வைரம் கொட்டிக் கொடுப்பேன்
என்னை நம்புங்கள் புன்னகை சிந்துங்கள்

கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன்
சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன்

ஆண் : என்ன குறையோ என்னிடத்தில் சொல்லு கண்ணே
வெண்ணிலவை நான் பொம்மை செய்வேன்
கண்ணில் வழியும் கண்ணீர் துளி காயும் முன்னே
கண்ணீர் துளிக்கு ஞாயம் செய்வேன்

சீதை அன்று சிதை போனாள் எரிந்தது நெருப்பும்
ராமன் இன்று சிறை போனான் இதுவொரு திருப்பம்
ராமன் அன்று சீதையை மீட்டு நடந்தான்
இன்று இலக்குவன் தான் ராமனை மீட்டுக் கொடுப்பான்

கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன்
சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன்
எந்தன் கண்ணுக்குள் வைத்து காவல் இருப்பேன்
உந்தன் அன்னைக்கும் எந்தன் ஆவிக் கொடுப்பேன்
என்னை நம்புங்கள் புன்னகை சிந்துங்கள்

கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன்
சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன்

கண்ணைத் துடைத்து மெல்ல நட மெல்ல நட
காவல் இருப்பேன் பின்னே பின்னே
கங்கை நதிக்கும் ரெண்டு பக்கம் கரை நின்று
காவல் இருக்கும் கண்ணே கண்ணே

வந்த உறவென்றுதானே உன்னை அன்று நினைத்தேன்
சொந்த உறவென்று இன்று இரு விழி நனைத்தேன்
சுற்றி வரும் பூமிதான் உள்ளவரைக்கும்
என் சொக்கத் தங்கக் கட்டியே சொந்தமிருக்கும்

கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன்
சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.