அதிரி புதிரி பண்ணிக்கடா பாடல் வரிகள்

Movie Name
Asal (2010) (அசல்)
Music
Bharathwaj
Year
2010
Singers
Mukesh
Lyrics
Vairamuthu
அதிரி புதிரி பண்ணிக்கடா?
எதிரி உனக்கு இல்லையடா
தொட்டதெல்லாம் வெற்றியடா
தொடாததும் தொட்டுக்கெடா
கண்களால் தொட்டதும்
கற்பு பதறுதே
உன் கையால்
நீ தொட்டாலே
கன்னி மொட்டுக்குள்ள

டொட்டொடய்ங்
டொட்டொடய்ங்

அதிரி புதிரி பண்ணட்டுமா?
எகிறி எகிறி துள்ளட்டுமா?
பின்னழகை பின்னட்டுமா?
பிச்சுப் பிச்சு தின்னட்டுமா?
காதலின் உலையிலே
ரத்தம் கொதிக்குதே
முழு முத்தம்
நீ இட்டால்
என் முதுகுத் தண்டுக்குள்ள

ரெண்டு பெரும் குடிக்கணுமே
ரெட்டை இதழ்தத் தீம்பால்
எத்தனை நாள் தின்னுவது
இட்லி வடை சாம்பார்?
முக்கனியில் ரெண்டு கனி
முட்டித் திங்க ஆசை
அப்பப்பா சலிச்சிருச்சே
அப்பள வடை தோச
பணயக் கைதிபோல என்னைய
ஆட்டிப் படைக்கிற
பங்குச் சந்தயப்போல என்னைய
ஏத்தி இறக்கிற
நெத்தியில எப்பவும்
கத்தி அடிக்கிற
கத்திக் கண்ணு
வத்தி வச்சா
என் உச்சிமண்டயில
டொட்டொடய்ங்
டொட்டொடய்ங்

பச்சப்புள்ள போல் இருப்பா
லச்ச கெட்ட பாப்பா
நெஞ்சுக்குள்ள வச்சதென்ன
முந்திரிக்காத் தோப்பா
கத்திரிக்கா மூட்ட போல
கட்டழகு சீப்பா
ஓரம் போட்டு வளத்ததப்பா
போத்திக்கிட்டு போப்பா
ஏப்பரல் மாத எரி போல
ஹார்ட்டு எறங்குதே
தங்கம் வெலையப் போல சும்மா
ஸ்கர்ட்டு ஏறுதே
புத்தியில் எப்பவும்
நண்டு ஊருதே
பச்சுப் பச்சு இச்சு வச்சா
என் நரம்பு மண்டலத்தில்
டொட்டொடய்ங்
டொட்டொடய்ங்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.