பூவுக்கென்ன பூட்டு பாடல் வரிகள்

Movie Name
Bombay (1995) (பம்பாய்)
Music
A. R. Rahman
Year
1995
Singers
Anupama Deshpande, Noel James
Lyrics
Vairamuthu
பூவுக்கென்ன பூட்டு காற்றுக்கென்ன ரூட்டு குல்லா குல்லா ஹல்லா குல்லா
வானும் மண்ணும் யாருக்கு நீயும் நானும் யாருக்கு குல்லா குல்லா ஹல்லா குல்லா

நீ சிரிச்சா தீவானா கைகொடுத்தா மஸ்தானா குல்லா குல்லா ஹல்லா குல்லா
நீயும் நானும் ஒண்ணானா ரூப்பு தேரா மஸ்தானா குல்லா குல்லா ஹல்லா குல்லா

சோலை கிளிக்கென்ன ஒரு கவலை எப்போதும் பறவைகள் அழுவதில்லை
சூரியனில் என்றும் இரவு இல்லை எப்போதும் சொர்க்கத்துக்குத் தடையில்லை
குல்லா குல்லா ஹல்லா குல்லா...குல்லா குல்லா ஹல்லா குல்லா

காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
மேகங்கள் மண்ணில் வீழ்ந்து காயங்கள் ஆனதில்லை
காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
மேகங்கள் மண்ணில் வீழ்ந்து காயங்கள் ஆனதில்லை
வாழத்தானே வாழ்க்கை வீழ்வதற்கு இல்லை
பொல்லாத ஜாதி மதம் இறைவனும் சொல்லவில்லை

(நீ சிரிச்சா)

பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
ஆசைக்கு ரெக்கைகட்டி கட்டவிழ்த்து ஆடவிடு
பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
ஆசைக்கு ரெக்கைகட்டி கட்டவிழ்த்து ஆடவிடு
வெல்லத்தானே வீரம் கொல்வதற்கு இல்லை
கையோடு கைசேர்த்து வானத்தையே தொட்டுவிடு

குல்லா குல்லா ஹல்லா குல்லா...குல்லா குல்லா ஹல்லா குல்லா

காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
வாழத்தானே வாழ்க்கை வீழ்வதற்க்கு இல்லை
பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
வெல்லத்தானே வீரம் கொல்வதற்க்கு இல்லை

நீ சிரிச்சா தீவானா கைகொடுத்தா மஸ்தானா
நீயும் நானும் ஒன்னானா ரூப்பு தேரா மஸ்தானா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.