சின்ன கானாங்குருவி பாடல் வரிகள்

Movie Name
Porkkaalam (1997) (பொற்காலம்)
Music
Deva
Year
1997
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vairamuthu
சின்ன கானாங்குருவி ஒன்னு
காலில் சலங்கை கட்டி
சின்ன கானாங்குருவி ஒன்னு காலில் சலங்கை கட்டி
கதக்களி ஆடுது இங்கே
கேள்விகள் கேட்டவர் எங்கே
கல்யாண பொண்ண சுத்தி கும்மி கொட்டுங்க
கையுள்ள பேர்கள் எல்லாம் கைகள் தட்டுங்க
சோ சோவா சோ சோவா சோ சோவா
சோ சோவா சோ சோவா சோ சோவா
சின்ன கானாங்குருவி ஒன்னு காலில் சலங்கை கட்டி
கதக்களி ஆடுது இங்கே ஹேய்

 மாலை கொண்ட வேளை ஓடும் பாம்ப போல
ஒன்னோடு ஒன்னாக பாப்பா
கெட்டி சாயம் போல ஒட்டிக்கொள்ள பாப்பா
கட்டில் முத்தம் கண்ணால கேப்பா
இனி வருகிற மாதம் அது மன்மத மாதம்
இனி ஒரு வாரம் திறக்காது தாப்பா
 என் ஆசை மகளே என் அருமை மகளே
நீ எதையும் கேளு சீர் செய்வேன் மகளே
அப்புறம் மகளே உன் நன்மைக்காக எங்கும் கடன் வாங்குவேன்
மைசூரு பேலஸ வித்து மைசூர் பாகு வாங்குவேன்
சோ சோவா சோ சோவா சோ சோவா
சோ சோவா சோ சோவா சோ சோவா
சின்ன கானாங்குருவி ஒன்னு காலில் சலங்கை கட்டி
கதக்களி ஆடுது இங்கே ஹேய்

 ஹோலே ஹோலே ஹோலே ஹோ….

 மல்லிகை பூக்களை வாட விடாதடி
மாமனை கட்டிலில் தூங்க விடாதடி
சிட்டு ஏ சிட்டு நீ சேலையில் மாமன கட்டு
அவசர வேளையில் ஓடிவிடாதடி
ஆசையை சேலையில் மூடிவிடாதடி
சிட்டு ஏ சிட்டு நீ மாமனின் மார்பில் முட்டு
பொண்ணு நெனைச்சா சாதிப்பா போக போக பாரப்பா
வெட்கம் போன பின்னாலே வெளக்க அணைச்சு சோதிப்பா
 அண்ணன் கையில் வளர்ந்த கிளி
அவன் கண்ணா வளர்த்த கிளி
வாய்மொழி கிளிக்கில்லை கண்ணே
தாய்மொழி எனக்கண்ணன் தானே
உன் தங்கையாக வந்து பிறப்பதென்றால்
பேசாமல் ஏழு ஜென்மம் பிறந்திடுவேன்
வார்த்தைக்கு சக்தியின்றி போனதால்
கண்ணீரில் எண்ணங்களை பேசினேன்
என் தோளில் வந்து நின்ற மாலையை
அண்ணனின் கால்களில் சூட்டுவேன்
 சின்ன கானாங்குருவி ஒன்னு காலில் சலங்கை கட்டி
கதக்களி ஆடுது இங்கே
கேள்விகள் கேட்டவர் எங்கே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.