கனிமொழியே என்னை பாடல் வரிகள்

Movie Name
Irandaam Ulagam (2013) (இரண்டாம் உலகம்)
Music
Harris Jayaraj
Year
2013
Singers
Vairamuthu
Lyrics
Vairamuthu
ஆ: கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்

கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்

இதயம் உடைத்து என்னை வாழச் சொல்கிறாய்
இமைகள் பறித்து என்னை தூங்கச் சொல்கிறாய்
ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்
மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய

நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆவதா
(ஆ: நான் எட்டு)

உந்தன் கன்னத்தோடு எந்தன் கன்னம் வைத்தால்
நானும் மண்ணில் கொஞ்சம் வாழ்ந்திருப்போன்
அடி உந்தன் கன்ன குழியில் என்னை புதைத்து வைத்தால்
மண்ணில் மாண்ட பின்னும் வாழ்ந்திருப்பேன்
ஒரு கள்ளப் பார்வை பார் அழகே
சிறு காதல் பேசும் ஊமைக் கிளியே
நான் தேடி திரியும் வாழ்வே நீ தானே
தென்றலே வா முன்னே முத்தமா கேட்கிறேன்
முறுவல் தான் கேட்கிறேன்

கனிமொழியே... ம்ம்ம்ம்ம்
கடைவிழியே... ம்ம்ம்ம்ம்

பறவை பறக்கும் போது
ஆகாயம் தொலைந்து போகும்
பார்வை பறவை மீதே பதிந்திருக்கும்
விழி உன்னை காணும் போது
உலகம் தொலைந்து போகும்
என் கண்கள் உந்தன் மீதே விழுந்திருக்கும்
என்னை கட்டி போடும் காந்த சிமிழே
ஒரு பாட்டு பாடு காட்டுக் குயிலே
என் காலை கனவின் ஈரம் நீதானா
வாழலாம் வா பெண்ணே வலது கால் எடுத்து வை
வாழ்க்கையை தொட்டு வை

கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்

பெ: இதயம் உடைத்து என்னை வாழச் சொல்கிறாய்
இமைகள் பறித்து என்னை தூங்கச் சொல்கிறாய்

ஆ: ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்
மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய்

நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆவதா
(ஆ: நான் எட்டு)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.