பழங்கள்ளா விஷ பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2023

Movie Name
Irandaam Ulagam (2013) (இரண்டாம் உலகம்)
Music
Harris Jayaraj
Year
2013
Singers
Vairamuthu
Lyrics
Vairamuthu
பழங்கள்ளா விஷ முள்ளா
ஒரு கூத காத்து கிள்ள
உன் கோபம் என்ன கொல்ல
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்
பாவி நெஞ்சம் எரியும்
ஒரு பைத்தியம் புடிச்சா பௌர்ணமி நிலவே
மேகத்த கிழிச்சு எரியும்
(ஆ... பழங்கள்ளா)

பொண்ணு மனசு ஒரு திணுசு
அதில் மிருகமும் தெய்வமும் வாழும்...

ஹேய்...புரிஞ்சதா...

பொண்ணு மனசு ஒரு திணுசு
அதில் மிருகமும் தெய்வமும் வாழும்
என்ன பந்தாடும் மிருகம்
கூரு போட்டு கூத்தாடும் தெய்வம்
அவ நெனப்ப புரிவதில்லே
ஒரு ஆம்பள பொழப்பு அழியும்
நீ கொஞ்சம் போல மெல்ல சிரிக்க
ஆத்தாடி என்ன பன்னி நான் தொலைக்க
பார்வையால் இருதயம் நினைக்கட்டுமா
பாதத்த இமைகளில் வருடட்டுமா
நீ சொல்லும் வார்த்தைக்கு வாசிக்கட்டுமா
கோபத்த கொண்டாடி ரசிக்கட்டுமா
(பழங்கள்ளா)

உலகத்துல தம்பதிக சேர்ந்திருப்பது ஒன்னோ ரெண்டு
அட வெளியில சேர்ந்து சுத்தும்
விட்டுக்குள்ள கட்டில் மாட்டும் ரெண்டு இருக்கும்
என் விதியே இது தானா
பெருந்தினவுக்கு பத்தியம் தானா
என் ராத்திரி எரியுதடி
தூக்கமில்ல ரகசியம் ஒடையுதாடி
கர்வத்தின் கர்பத்தில் வளர்ந்தவளே
காதலின் திமிருக்கு பிறந்தவளே
கருணையால் இதயத்தை கொன்றுவிடு
கல்லரையில் என்னோடு வாழ்ந்துவிடு...

யேலே யேலே யேலே ஏலா
ஒரு ஊத காத்து கிள்ள
உன் கோபம் என்ன கொல்ல
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்
தானே தானே தானா...
ஒரு பைத்தியம் புடிச்சா பௌர்ணமி நிலவு

இதுக்கு மேல என்ன சொல்லுரது

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.