காடு பொட்ட காடு பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Karuththamma (1994) (கருத்தம்மா)
Music
A. R. Rahman
Year
1994
Singers
Bharathiraja, Malaysia Vasudevan
Lyrics
Vairamuthu
காடு பொட்டல் காடு
செங்காத்து வீசும் காடு
வீடு கீத்து வீடு
எலியோடு எங்கே பாடு

(காடு பொட்டல் காடு)

கூழு சோளக் கூழு
வெங்காயம் கூடச் சேரு
தை மாசம் நெல்லுச் சோரு
பூமி எங்க பூமி
வானம் பாத்து வாழும் பூமி
தூங்கி போச்சு எங்க சாமி

(காடு பொட்டல் காடு)

அந்தி நேரம் வந்த தலயெல்லாம் எண்ணிப் பாரு
ஆடு மாட சேர்த்து எங்க வீட்டில் ஏழு பேரு
ஆறு எங்க ஆறு அட போடா வெட்க்க கேடு
மழை வந்த தண்ணி ஓடும்
மறு நாளே வண்டி ஓடும்
கண்ணு பெத்த கண்ணு
என் கண்ணு குட்டியும் ஒண்ணு ஒண்ணு
கஞ்சி ஊத்தும் எங்க மண்ணு

(காடு பொட்டல் காடு)

(காக்கா இளப்பாற கருவேலம் மரம் இருக்கு...
என் மக்க இளப்பாற மாமரத்து நிழல் இருக்கா?
கொக்கு பசி ஆற கொக்குளத்து மீனிருக்கு...
என் மக்க பசி ஆற மக்கி போன நெல்லிருக்கா?)

மாடு தத்த மாடு இது ஓடும் ரொம்ப தூரம்
வாழ்கை தத்த வாழ்கை
இது போகும் ரொம்ப காலம்
காட்டு கள்ளிக்குள்ளே
உள்ளாடும் பாலப்போலே
உள்ளூர கண்ணீர் பொங்கும்
சொல்லாம உள்ளம் பொங்கும்
பட்ட மரத்து மேலே
எட்டி பார்க்கும் ஓணான் போலே
வாழ வந்த பூமி மேலே

(காடு பொட்டல் காடு)
(காடு பொட்டல் காடு)
(கூழு சோளக் கூழு)
(காடு பொட்டல் காடு)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.