கான மயிலே உன்னை பாடல் வரிகள்

Movie Name
Vettaiyaadu Vilaiyaadu (1989) (வேட்டையாடு விளையாடு)
Music
Chandrabose
Year
1989
Singers
Malasiya Vasudevan, S. P. Sailaja
Lyrics
Vairamuthu
ஆண் : கான மயிலே உன்னை கைப்பிடிப்பேன்
என்று சொல்லி வேலவர் கோயிலிலே
வேட்டி போட்டு தாண்டுறேன்டி..ஆஹாஹ்

தங்கக் கிளியே உனக்கு தாலி தருவேன்
என்று சொல்லி காளியம்மன் கோயிலிலே
கற்பூரம் அணைக்கிறேன்டி....ஆஹாஹ்

மீசை துடிக்குதம்மா மேல் மூச்சு வாங்குதம்மா
மையல் பிறந்ததம்மா இது மை வச்ச மாயமம்மா
மச்சினிச்சி பேரைச் சொல்லி
மாங்கா ரெண்டு வாங்க சொல்லி

பெண் : மீச துடிக்கலாமா மேல் மூச்சு வாங்கலாமா
மையல் பிறக்கலாமா நான் மையா வச்சேன் மண்டு மாமா
மச்சினிச்சி பேரைச் சொல்லி
மாங்கா ரெண்டு வாங்க சொல்லி

குழு : மச்சினிச்சி பேரைச் சொல்லி
மாங்கா ரெண்டு வாங்க சொல்லி...

ஆண் : அடங்காத யானைக்கு குறியும் வச்சே
அழகான கண்ணுக்குள் வசியம் வச்சே..
குழு : ஆமாம் வசியம் வச்சே
பெண் : அறியாத பொண்ணத்தான் உருக வச்சே
அட காத்த தேன் கூட்ட ஒடைய வச்சே
குழு : ஆமாம் ஒடைய வச்சே

ஆண் : சும்மா கெடந்தது என் சங்கு
அம்மா ஊதினா வீண் வம்பு
பெண் : அய்யா சொல்வது பொல்லாப்பு
சும்மா ஆடுமா மாராப்பு
ஆண் : ஐயோ விலகி நில்லு அல்லிக்கென்ன வளக்காப்பு

பெண் : மீச துடிக்கலாமா மேல் மூச்சு வாங்கலாமா
ஆண் : மையல் பிறந்ததம்மா இது மை வச்ச மாயமம்மா

ஆண் : அப்போதே என் மேலே அடி போட்டாளே
ஆளான பின்னாலே பொடி போட்டாளே
பெண் : சின்னப் பெண் உள்ளத்தில் செடி நட்டானே
குமரிப் பெண் ஆனேனே கொடி நட்டானே

ஆண் : அடி ஏண்டி துள்ளுது முந்தான
என்ன முட்டுது ரெண்டானை
பெண் : தானாப் பொங்குது பால் பானை
நேரம் பாக்குது ஒரு பூனை
ஆண் : புத்தி மாறுதடி புடிக்கணும் புள்ளிமான...

பெண் : மீச துடிக்கலாமா மேல் மூச்சு வாங்கலாமா
மையல் பிறக்கலாமா நான் மையா வச்சேன் மண்டு மாமா
மச்சினிச்சி பேரைச் சொல்லி
மாங்கா ரெண்டு வாங்க சொல்லி

மீசை துடிக்குதம்மா மேல் மூச்சு வாங்குதம்மா
மையல் பிறந்ததம்மா இது மை வச்ச மாயமம்மா
மச்சினிச்சி பேரைச் சொல்லி
மாங்கா ரெண்டு வாங்க சொல்லி...

குழு : மச்சினிச்சி பேரைச் சொல்லி..ஹே ஹேய்
மாங்கா ரெண்டு வாங்க சொல்லி..ஓஓ ஓஹோய்....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.