ஓஓஒஹ்ஓஹோ ஆஆஆஹ்ஹஆஹா பாடல் வரிகள்

Movie Name
Vettaiyaadu Vilaiyaadu (1989) (வேட்டையாடு விளையாடு)
Music
Chandrabose
Year
1989
Singers
Mano, Vanitha
Lyrics
Vairamuthu
ஆண் : ஓஓஒஹ்ஓஹோ ஆஆஆஹ்ஹஆஹா
தண்டை அணிந்தவளே உன்னோடு
சண்டை பிடிக்க வந்தேன்
ரத்தம் குடிப்பவளே உன்னோடு
யுத்தம் நடத்த வந்தேன்

கடவுளுக்கு ஒரு நீதி மனிதனுக்கு ஒரு நீதி
வகுத்தவளே நீதானா வழக்கு வந்தால் விடுவேனா
உடுக்கை அடிப்பேன் இன்னும் தூக்கமா

தண்டை அணிந்தவளே உன்னோடு
சண்டை பிடிக்க வந்தேன்
ரத்தம் குடிப்பவளே உன்னோடு
யுத்தம் நடத்த வந்தேன்

ஆண் : எடுத்த சபதம் நடத்தி முடிக்க அடிக்கடி
புதிய வடிவம் எடுப்பாய்
ஊரை மாத்தி பேரை மாத்தி அடிக்கடி
முகத்தை திரையில் மறைப்பாய்
கொடுமை முடித்து விட்டு குருதி குடித்து விட்டு
குழந்தை வடிவில் சிரிப்பாய்

பெண் : அன்னை வழி மகன் சென்றால்
அது என்ன பிழையோ
ஆளுக்கொரு நீதி என்றால்
அது என்ன முறையோ சொல்லடி.....

ஆண் : தண்டை அணிந்தவளே உன்னோடு
சண்டை பிடிக்க வந்தேன்
ரத்தம் குடிப்பவளே உன்னோடு
யுத்தம் நடத்த வந்தேன்

பெண் : துடிக்கும் கடலும் வெடிக்கும்
நிலமும் உயிர்களும் உனது படைப்பு இல்லையா
உனது குழந்தை அழுது புலம்பி தவிக்கையில்
உனக்கு வலிக்கவில்லையா

சங்கதி தெரிந்த பின்னும் சங்கடம் அறிந்த பின்னும்
சன்னதி திறக்கவில்லையா

ஆண் : பல உயிர்களை கேட்பாய் அது என்ன முறையா
இரு உயிருக்கு உயிர் தந்தேன் இது என்ன பிழையா சொல்லடி.....

ஆண் : தண்டை அணிந்தவளே உன்னோடு
சண்டை பிடிக்க வந்தேன்
ரத்தம் குடிப்பவளே உன்னோடு
யுத்தம் நடத்த வந்தேன்

கடவுளுக்கு ஒரு நீதி மனிதனுக்கு ஒரு நீதி
வகுத்தவளே நீதானா வழக்கு வந்தால் விடுவேனா
உடுக்கை அடிப்பேன் இன்னும் தூக்கமா

தண்டை அணிந்தவளே உன்னோடு
சண்டை பிடிக்க வந்தேன்
ரத்தம் குடிப்பவளே உன்னோடு
யுத்தம் நடத்த வந்தேன்.......

அங்கிள் உந்தன் கண்ணில் நான் என்னை பார்க்கிறேன்
அள்ளிக் கொள்ளும்போது நான் அன்னை பார்க்கிறேன்
கன்னம் தொடும்போது கண்ணில் கங்கை பார்க்கிறேன்
உன்னை நம்பித்தானே இந்த மண்ணில் வாழ்கிறேன்

கண்ணே உந்தன் கண்ணில் அந்த கண்கள் பார்க்கிறேன்
அம்மா உந்தன் பேச்சில் உந்தன் அன்னை பார்க்கிறேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.