வை ராஜா வை உன் வலது கையை பாடல் வரிகள்

Movie Name
Panchatanthiram (2002) (பஞ்ச தந்திரம்)
Music
Deva
Year
2002
Singers
Srinivas
Lyrics
Vairamuthu

மேரீ ஜான் மேரீ ஜான் சண்டே கே சண்டே
ஆஹா மேரீ ஜான் மேரீ ஜான் சண்டே கே சண்டே
மேரீ ஜான் மேரீ ஜான் சண்டே கே சண்டே
ஆஹா மேரீ ஜான் மேரீ ஜான் சண்டே கே சண்டே

வை ராஜா வை உன் வலது கையை வை
செய் ராஜா செய் உன் சேவை எல்லாம் செய்
அண்டம் எல்லாம் பொய் பொய்
இதில் ஆணும் பெண்ணும் மெய் மெய்

பஜன் பஜன் காதல் பஜன் செய் பஜன் பஜன்
ஓ... பஜன் பஜன் காதல் பஜன் செய் பஜன் பஜன்

செய் ராணி செய் உன் சேவை எல்லாம் செய்
காணும் உலகம் பொய் பொய்
நம் கட்டில் இன்பம் மெய் மெய்
பஜன் பஜன் காதல் பஜன் செய் பஜன் பஜன் ( மேரீ ஜான்)

நமநமநம நமநம நமநம நம நமன்னு இருக்குதே
சிவசிவசிவ சிவசிவ சிவசிவ
சிவந்த கன்னம் அழைக்குதே

கொதிகொதிகொதி கொதிகொதி கொதியென
கொதிக்கும் ரத்தம் கொதிக்குதே
படுபடுபடு படுபடு படு என
படுக்கை என்னை படுத்துதே

ஐய்யயோ கட்டில் மேலே
ஆசை என்னை துவைக்குதே
அச்சசோ என் முகத்தில்
மீசை கூட முளைக்குதே

மணிப் புறாவும் மாடப் புறாவும்
கூட்டுக்குள்ளே கூடுதல் போலே
மணிக் கணக்கில் நீயும் நானும்
கலக்குவோம் ஒரு போர்வைக்குள்ளே

பஜன் பஜன் காதல் பஜன் செய்
பஜன் பஜன் பஜன் பஜன்
பஜன் பஜன் காமன் பஜன் செய்
பஜன் பஜன் பஜன் பஜன்....(வை ராஜா)

சில்லென்று தழுவி செவி ரெண்டும் தடவி
செல்லமாய் கொலை செய்வாள் சிங்காரத் தலைவி
சிற்றின்பக் குருவி தித்திக்கும் அருவி
சிற்றாடை ஒவ்வொன்றாய் துறக்கின்ற துறவி

மணிப் புறாவும் மாடப் புறாவும்
கொத்திக் கொண்டே கூடுதல் போலே
முளைத்திருக்கும் காமத் தீயை
அடக்குவோம் ஒரு ஜாடிக்குள்ளே....(பஜன்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.