வந்தேன் வந்தேன் மீண்டும் பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Panchatanthiram (2002) (பஞ்ச தந்திரம்)
Music
Deva
Year
2002
Singers
Kamal Haasan, Nithyasree Mahadevan, Sujatha Mohan
Lyrics
Vairamuthu

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன்
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்..
யாரோடி வாயாடி கள்ளியே வில்லியே தள்ளிப்போடி
ராமனின் மைதிலி நாந்தாண்டி
பொம்பள போக்கிரி ஓடிப்போடி
உன் ஆசைக்கு ஆதிசேஷன் தேடுதோடி

பந்தியில பங்கு கேட்டா விட்டு தருவேன்
என் முந்தியில பங்கு கேட்டா வெட்டி புடுவேன்
அடி கண்டவளும் வந்து கைய வைக்க
அவர் கார்பரேஷன் பம்ப் அல்ல…….(வந்தேன்)

பேசாதே பேசாதே
கொஞ்சம் அழகாக ஏந்தான் பிறந்தேனோ
போதும் நான் பட்ட பாடு
வேங்கை ஒரு பக்கம் சிங்கம் ஒரு பக்கம்
நடுவில் நாந்தானே ஆடு

அட என் ஜீவன் போனாலும்
உன் கற்பை நான் காப்பேன்
சிரி கொஞ்சம் ஸ்ரீ ராமா
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
வாயேண்டி ஆடேண்டி
முட்டிதான் பார்க்கலாம் வாரியாடி
உன் முட்டிதான் பேர்ந்திடும் ஓடி போடி

நான் பச்ச கிளி நீ வெட்டுக் கிளி போட்டி என்னடி
உன்னை ஆட்டி வைப்பேன் பேயை ஓட்டி வைப்பேன்
எந்தன் ஸ்ரீ ராமன் மேல் ஆணை
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்

எனக்கு எனக்கு நீ சரிசமா கம
தத்திலாங்கு தோம் தததாரிகிரிதோம்
ஏய் எனக்கு நீயா உனக்கு நானா
ஒண்டிக்கு ஒண்டி பார்த்துடலாமா?

வாயேண்டி ஜதி போடேண்டி
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே
வந்தேன் ரெடியா
வாயாடி எனக்கு சமமாடி
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.