காதலே என் காதலே பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Duet (1994) (டூயட்)
Music
A. R. Rahman
Year
1994
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vairamuthu
லவ் இஸ் டார்ச்சர்
வேர்ட்ஸ் கான்ட் ஜஸ்ட் எக்ஸ்பிரஸ்
லவ் இஸ் கேம்பல்
வித் டியர்ஸ் ஆஃப் பெயின்
இன் லைஃப்ஸ் டிஸ்ட்ரஸ்
லவ் மேக் யோர் லைஃப் எ ஸ்ட்ரயின்
வேர் மனி ஸ்டாண்ட்ஸ்
டூ லூஸ் தி கேம்
லவ் ஹேஸ் திஸ் கிரேஸி நேம்
வேர் பெயின் அண்ட் ஸாரோ
டை டவுன் இன் ஷேம்...

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில்
என்ன தரப் போகிறாய் ( இசை )
கிள்ளுவதைக கிள்ளி விட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்

***
காதலே நீ பூவெறிந்தால்
எந்த மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால்
எந்தக் கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீள்வதா... இல்லை வீழ்வதா..
உயிர் வாழ்வதா... இல்லை போவதா..
அமுதென்பதா விஷமென்பதா
உன்னை அமுத விஷமென்பதா ( இசை )

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்

***
காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிக்கொண்டாய்
நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்
இது மாற்றமா... தடுமாற்றமா..
என் நெஞ்சிலே... பனி மூட்டமா..
நீ தோழியா இல்லை எதிரியா
என்று தினமும் போராட்டமா

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில்
என்ன தரப் போகிறாய்
கிள்ளுவதைக கிள்ளி விட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.