Song lyrics

July Matham Lyrics

ஜூலை மாதம் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
A. R. Rahman
Year
1993
Singers
S. P. Balasubramaniam, Vairamuthu
Lyricist
Vairamuthu
July Matham

Lyrics

July Matham Lyrics

பெண் : ஜூலை மாதம் வந்தால்
ஜோடி சேரும் வயசு
மாலை நேரம் வந்தால்
பாட்டு பாடும் மனசு
அச்சம் நாணம் என்பது
ஹைதர் கால பழசு
முத்து முத்தம் போடவா
ரத்தம் புத்தம் புதுசு

ஆண் : ஜூலை மாதம் வந்தால்
ஜோடி சேரும் வயசு
மாலை நேரம் வந்தால்
பாட்டு பாடும் மனசு
அச்சம் நாணம் என்பது
ஹைதர் கால பழசு
முத்து முத்தம் போடவா
ரத்தம் புத்தம் புதுசு

***

ஆண் : வெட்ட வெளியில் போவோமா
அடி சிட்டுக்குருவியின் சிறகை கேள்
நட்ட நடு நிசி நேரத்தில்
நாம் சற்றே உறங்கிட நிலவை கேள்
காடு மலைகள் தேசங்கள்
காண்போமா காற்றை கேள்
வீடு வேண்டாம் கூடொன்று
வேண்டாமா காட்டை கேள்

பெண் : காதல் என்று சொன்னதும்
காற்றும் கைகள் கட்டும்
காதல் என்னும் வார்த்தை தான்
சர்வதேச சட்டம்

ஆண் : ஜூலை மாதம் வந்தால்
ஜோடி சேரும் வயசு

பெண் : மாலை நேரம் வந்தால்
பாட்டு பாடும் மனசு

ஆண் : அச்சம் நாணம் என்பது
ஹைதர் கால பழசு

பெண் : முத்து முத்தம் போடவா
ரத்தம் புத்தம் புதுசு

ஆண் : ஜூலை மாதம் வந்தால்
ஜோடி சேரும் வயசு

பெண் : மாலை நேரம் வந்தால்
பாட்டு பாடும் மனசு

***

ஆண் : புதியதல்ல முத்தங்கள்
இனி பொய்யாய் வேஷம் போடாதே
உள்ளம் எல்லாம் என் சொந்தம்
அதை உள்ளங்கையில் மூடாதே

காதல் வந்தால்
கட்டில் மேல் கண்ணீரா கூடாதே
கண்கள் பார்த்து
ஐ லவ் யூ சொல்லிப்பார் ஓடாதே

பெண் : காதல் என்னும் ஏட்டிலே
நீயும் நானும் உச்சம்
கோடி மக்கள் வேண்டுகோள்
கொஞ்சம் வைப்போம் மிச்சம் (இசை)

பெண் : ஜூலை மாதம் வந்தால்
ஜோடி சேரும் வயசு

ஆண் : மாலை நேரம் வந்தால்
பாட்டு பாடும் மனசு

பெண் : அச்சம் நாணம் என்பது
ஹைதர் கால பழசு

ஆண் : முத்து முத்தம் போடவா
ரத்தம் புத்தம் புதுசு

பெண் : ஜூலை மாதம் வந்தால்
ஜோடி சேரும் வயசு

ஆண் : மாலை நேரம் வந்தால்
பாட்டு பாடும் மனசு

ஆ & பெ: அச்சம் நாணம் என்பது
ஹைதர் கால பழசு
முத்து முத்தம் போடவா
ரத்தம் புத்தம் புதுசு
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people