கன்னம் சிவக்க பாடல் வரிகள்

Movie Name
Aasai Aasaiyai (2003) (ஆசை ஆசையாய்)
Music
Mani Sharma
Year
2003
Singers
Mahalakshmi Iyer, Ranjith
Lyrics
Vairamuthu
பெண் : கன்னம் சிவக்க
என் கன்னம் சிவக்க
நீ முத்தம் கொடுத்துவிடு
ஹே முத்தம் கொடுத்துவிடு

ஆண் : கன்னம் சிவக்க
உன் கன்னம் சிவக்க
நான் முத்தம் கொடுத்திடுவேன்
நான் முத்தம் கொடுத்திடுவேன்

பெண் : முத்தம் மொத்தம் எத்தனையோ
சொல்லி தருவாயா
கின்னஸ் புத்தகம் கிழியும் வரை
அள்ளி தருவாயா

ஆண் : ஒரு வெட்கம் இல்லை
இனி விதிகள் இல்லை
நம் முத்தம் சொர்க்கம் தொடுமே…..ஏ….ஏ….
வெள்ளை மேகம் எடுத்து
தன் கண்கள் மறைத்து
அந்த வானம் மூடி கொள்ளுமே….ஏ…..ஏ….

பெண் : ஹே கன்னம் சிவக்க
என் கன்னம் சிவக்க
நீ முத்தம் கொடுப்பாயா
ஹே முத்தம் கொடுப்பாயா

குழு : ஹு ஊ ஊ ஊஉ ஊ ஊ ஊ ஊஉ ஊ
ஹு ஊ ஊ ஊஉ ஊ ஊ ஊ ஊஉ ஊ

ஆண் : ஆயிரம் பேர்கள்
பெண் : ஹோய் ஹோய்
ஆண் : அவை ஒன்றில் இருக்க
பெண் : ஹோ ஹோ
ஆண் : கண்களில் எல்லாம் மண்களை தூவி
கொடுப்பது மின்னல் முத்தம்

பெண் : சுவர்களின் செங்கல்
ஆண் : ஹோய் ஹோய்
பெண் : சில்லென்று சிதற
ஆண் : ஹோ ஹோ
பெண் : எதிர் ஒளி கேட்க
இதழ்களில் தருவது
டிடிஎஸ் ஓசை முத்தம்

ஆண் : அடி இதழ் வழியாமல்
இதமாய் தந்தால்
அடி இதழ் வழியாமல்
இதமாய் தந்தால்
அஹிம்சை முத்தமே

பெண் : அட சக்கரை இதழை
சக்கை செய்தால்
அட சக்கரை இதழை
சக்கை செய்தால்
வன்முறை முத்தமே

ஆண் : உதடு மாற்றி பருகும்போது
உயிரை மாற்றும் முதல் முத்தமே

பெண் : கன்னம் சிவக்க
என் கன்னம் சிவக்க
ஏ ஹே நீ முத்தம் கொடுத்துவிடு
ஹே முத்தம் கொடுத்துவிடு

குழு : பெஸ்ட் கிஸ்ஸு தரா
இனிய லிப்பு கிஸ்ஸு தரா
பெஸ்ட் கிஸ்ஸு தரா
இனிய லிப்பு கிஸ்ஸு தரா
பெஸ்ட் கிஸ்ஸு தரா
இனிய லிப்பு கிஸ்ஸு தரா

ஆண் : பெஸ்ட் கிஸ்ஸு தரா
இனிய லிப்பு கிஸ்ஸு தரா
பெஸ்ட் கிஸ்ஸு தரா
இனிய லிப்பு கிஸ்ஸு தரா
தரா தரா தரா

பெண் : உள்ளத்துக்குள்ளே
ஆண் : ஹோய் ஹோய்
பெண் : பாரம் இருந்தால்
ஆண் : ஹோ ஹோ
பெண் : உதடுகள்ளாலே
கவலைகள் துடைப்பது
காதலில் தாய் முத்தம்

ஆண் : பிரிவுகளாலே
பெண் : ஹோய் ஹோய்
ஆண் : காய்ந்து கிடந்தது
பெண் : ஹோ ஹோ
ஆண் : இணைகிற போது இதழ்களை
தின்பது காதலில் பேய் முத்தம்

பெண் : இரு கண்களின் மேலே
இரு உதடுகள் நடந்தால்
இரு கண்களின் மேலே
உதடுகள் நடந்தால்
கவிதை முத்தமே

ஆண் : இரு தாமரை மேலே
இரு உதடுகள் படர்ந்தால்
இரு தாமரை மேலே
இரு உதடுகள் படர்ந்தால்
காமன் முத்தமே

பெண் : நாம் விழிக்கும் போதும்
குளிக்கும் போதும்
தொடர வேண்டும் தொடர் முத்தமே

பெண் : கன்னம் சிவக்க
என் கன்னம் சிவக்க
நீ முத்தம் கொடுத்துவிடு
ஹே முத்தம் கொடுத்துவிடு

ஆண் : கன்னம் சிவக்க
உன் கன்னம் சிவக்க
நான் முத்தம் கொடுத்திடுவேன்
நான் முத்தம் கொடுத்திடுவேன்

பெண் : முத்தம் மொத்தம் எத்தனையோ
சொல்லி தருவாயா
கின்னஸ் புத்தகம் கிழியும் வரை
அள்ளி தருவாயா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.