காதல் ஒரு பள்ளிக்கூடம் பாடல் வரிகள்

Movie Name
Aasai Aasaiyai (2003) (ஆசை ஆசையாய்)
Music
Mani Sharma
Year
2003
Singers
Sujatha Mohan
Lyrics
Vairamuthu
குழு : தின்னா தின்னக் தினத்தின்
தின்னா தின்னக் தினத்தின்
தின்னா தின்னக் தினத்தின்
நக்தினத்தின் னா

குழு : தின்னா தின்னக் தினத்தின்
தின்னா தின்னக் தினத்தின்
தின்னா தின்னக் தினத்தின்
நக்தினத்தின் னா

பெண் : காதல்….ஒரு பள்ளிக்கூடம்
கண்கள்…….அதில் பாடமாகும்
கற்றால்…..அது வேதமாகும்
நீயும் காதல் செய்…..

பெண் : காதல்…..நம் சொந்த சுவாசம்
காதல்….நம் ஆன்ம தாகம்
காதல் நம் ரத்த ஓட்டம்
நீயும் காதல் செய்…..

பெண் : உலகத்தின் ஜீவ சக்தி
பசி காதல் ரெண்டும்தான்……
பசி கூட தீர்ந்து போகும்
தீராது காதல்தான்……

பெண் : நீ காதல் செய்க
உன் ஜென்மம் வெல்க…..
நீ காதல் செய்க
உன் ஜென்மம் வெல்க…..ஆக
நம் காதல் வாழ்க….

பெண் : காதல்….ஒரு பள்ளிக்கூடம்
கண்கள்…….அதில் பாடமாகும்
கற்றால்…..அது வேதமாகும்
நீயும் காதல் செய்…..

பெண் : உயிர் தந்த……உடல் தந்த
உன் பெற்றோரை காதல் செய்….
மொழி தந்த….வழி தந்த
உன் குருவை நீ காதல் செய்….

பெண் : ஒரு நேரம் பசி தந்த
உன் சுற்றம் நீ காதல் செய்….
உயிர் தந்து உயிர் காக்கும்
உன் நட்பை நீ காதல் செய்…..

பெண் : மேகம் என்னும் ஒரு தாளில்
காதல் கிறுக்கும் சிரு மின்னல்
அதை காதல் செய்….
பூமி என்னும் பொன் தட்டில்
வெள்ளி காசை விழும் மழையை
நீ காதல் செய்…..

பெண் : உதிர்ந்து உதிர்ந்து பின்னும்
வளர்ந்து வளர்ந்து வந்து
முளைக்கும் கொழுந்தினை காதல் செய்…..
குறைந்து குறைந்து தினம்
கரைந்து கரைந்து பின்னும்
வளரும் பிறையை நீ காதல் செய்……

பெண் : காதல்….ஒரு பள்ளிக்கூடம்
கண்கள்…….அதில் பாடமாகும்
கற்றால்…..அது வேதமாகும்
நீயும் காதல் செய்…..

பெண் : காதல்…..நம் சொந்த சுவாசம்
காதல்….நம் ஆன்ம தாகம்
காதல் நம் ரத்த ஓட்டம்
நீயும் காதல் செய்…..

பெண் : பருந்தொடு சிறு கோழி
பறந்தடிக்குதே அந்த
கோபத்தை காதல் செய்க….

பெண் : நிழல் நீட்ட மரக்கூட்டம்
வெயில் தாங்குதே அந்த
தியாகத்தை காதல் செய்க…..

பெண் : அறிவூட்டிடும் உன் வறுமையை
நீ காதல் செய்….
அதை நீக்கிடும் உன் திறமையை
நீ காதல் செய்…..

பெண் : {நாடு காடு எங்கும்
நரம்பை போல வரும்
நதிகளை காதல் செய்க….
அன்னை ஈன்றவுடன்
நம்மை ஏந்தி கொண்ட
மண்ணை காதல் செய்க….} (2)

பெண் : தேசத்துக்கு போர் சின்னம்
தேசிய கொடியை காதல் செய்
தேசிய கொடிக்கு வலி சிந்தும்
சிப்பாய் படையை காதல் செய்…..

பெண் : {காதல்….ஒரு பள்ளிக்கூடம்
கண்கள்…….அதில் பாடமாகும்
கற்றால்…..அது வேதமாகும்
நீயும் காதல் செய்…..

பெண் : காதல்…..நம் சொந்த சுவாசம்
காதல்….நம் ஆன்ம தாகம்
காதல் நம் ரத்த ஓட்டம்
நீயும் காதல் செய்…..} (2)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.