தீப்பொறி போன்றது பாடல் வரிகள்

Movie Name
Aasai Aasaiyai (2003) (ஆசை ஆசையாய்)
Music
Mani Sharma
Year
2003
Singers
K. S. Chithra, Karthik
Lyrics
Vairamuthu
ஆண் : தீப்பொறி போன்றது
ஒரு காதல் என்பது
அதை வாழ்க்கை என்னும்
திரியில் ஏற்றுவோம்

பெண் : உள்ளம் என்பது
பெரு வெள்ளம் போன்றது
இரு கரைகள் செய்து
நதியாய் மாற்றுவோம்

ஆண் : ஒரு உறவில் வளரும் காதல்
அது மழையின் துளியாய் தேங்கும்
சிறு பிரிவில் வளரும் காதல்
அது எரியும் தீயாய் ஓங்கும்

ஆண் : நம் காதல் புது சக்தி
புது உலகம் செய்வோம்

ஆண் : கண் தூங்க மாட்டோம்
செல் போன் பேச மாட்டோம்
கல் தேய்ந்து போகும்
எங்கள் சொல் தேய மாட்டோம்

பெண் : ஊர் காணும் வண்ணம்
இனி நேர் காண மாட்டோம்
பூவோடு தூங்கும்
சிறு தேன் போல வாழ்வோம்

ஆண் : பொய் காதல் உடலோடு துள்ளும்
மெய் காதல் உடல் மீறி செல்லும்
எப்போதும் தடை தாண்டி வெல்லும்

ஆண் : மண்ணோடு வாழும்
ஒரு பொன் போல வாழ்வோம்
நம் காலம் வந்தால்
நகையாய் மாறி போவோம்

பெண் : சில நாளில் சிலையாவாய்
உளி தாங்குவாய் மலரே

பெண் : நாம் கொண்ட காதல்
சில நாள் தள்ளி வைப்போம்
நாள்தோறும் வெற்றி
அதையே புள்ளி வைப்போம்

ஆண் : போர் காலம் போல
ஒரு போர் கோலம் கொள்வோம்
பூகம்பம் வந்தால்
அதையும் போராடி வெல்வோம்

ஆண் : கூட்டுக்குள் வண்ணத்து பூச்சி
அதுதானே பொறுமைக்கு சாட்சி
நாளைக்கு நம் காதல் ஆட்சி

பெண் : மண் மூடும் போதும்
விதைகள் கண் மூடவில்லை
விதை வெற்றி கொள்ளும்
மழையின் துளி வீழும் வேளை

ஆண் : ஹோ ஓ ஆகாயம் நமதாகும்
சில நாள் பொறு கிளியே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.