சந்திரனை தொட்டது யார் பாடல் வரிகள்

Movie Name
Ratchagan (1997) (ரட்சகன்)
Music
A. R. Rahman
Year
1997
Singers
Hariharan, Sujatha Mohan
Lyrics
Vairamuthu
சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா
சத்தியமாய் தொட்டது யார் நான்தானே அடி நான்தானே
கனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நான்தானே ஆ..
(சந்திரனை..)

பூக்களை, செடிகொடியின் பொருளென்று நினைத்திருந்தேன்
பூக்களை செடிகொடியின் பொருளென்று நினைத்திருந்தேன்
பூவே உன்னைப் பார்த்த பின்னே பூக்களின் மொழியறிந்தேன்
தலையணை என்பதெல்லாம் தலைக்கென்று நினைத்திருந்தேன்
தலைவனைப் பிரிகையிலே தலையணைத் துணையறிந்தேன்
தீப்பந்தம் போன்றவன் நான் தீபமென்று மாறிவிட்டேன்
புயலுக்கு பிறந்தவள் நான் தென்றலென்று மாறிவிட்டேன்
கருங்கல்லைப் போன்றவன் நான் கற்பூரம் ஆகிவிட்டேன்
(சந்திரனை..)

தாமரை மலர்கொண்டு உடல் செய்த ஓவியமே
என்னுடல் பாரம் மட்டும் எந்த விதம் தாங்குகிறாய்
மீன்களை சுமப்பதொன்றும் நீருக்கு பாரமில்லை
காதலை சுமக்கையிலே காதலரும் பாரமில்லை
சொர்க்கத்துக்கு வந்துவிட்டோமே தர்க்கத்துக்கு நேரமில்லை
முத்தங்களை நீ வழங்கு இதழுக்கு ஈரமில்லை
தொடங்குதல் மிக எளிது முடிப்பதுதான் பெரிய தொல்லை
(சந்திரனை..)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.