தென்றல் எந்தன் பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Iniavaley (1998) (இனியவளே)
Music
Deva
Year
1998
Singers
Anuradha Sriram
Lyrics
Vairamuthu
தென்றல் எந்தன் நடையை கேட்டது தத்தோம் தகதோம்
தாழம்பூவின் வாசம் கேட்டேன் தித்தோம் திகிதோம்
மூன்றாம் பிறை என் நகங்கள் கேட்டது தத்தோம் தகதோம்
முகிலில் ஆட ஊஞ்சல் கேட்டேன் தித்தோம் திகிதோம்
இரவுகள் என்னிடம் கண்மை கேட்டன தத்தோம் தகதோம்
ரசிக்கும்படி ஒரு ரகசியம் கேட்டேன் தித்தோம் திகிதோம்
அழைக்காத போதும் நிலவு வந்தது
தித்தோம் திகிதோம் திகிதோம் திகிதோம்

பகலில் வராத பால் நிலவே ஏன் என்னைத்தேடி வந்தாய்
எதையோ கேட்க ஏங்கி நின்றாய்
இரவில் வராத சூரியனே ஏன் என்னைத்தேடி வந்தாய்
எதை இரவல் வாங்க நின்றாய்

ஆஆ...சாரல் மழை பூவாகி சந்தமுடன் தானாடும்
தங்க நிற நூலாகி தாவணியை தான் சேரும்
வா வா இன்றுதான் ஒரு மாலை நேரம் வாய்ப்பிருக்கு
வாசல் கோலம் வண்ணம் கேட்டது தத்தோம் தகதோம்
காற்றில் கலையாதிருக்க சொன்னேன் தித்தோம் திகிதோம்

மண்ணைத் தொடாத மழைத்துளியே நான் உன்னை ஏந்தி நின்றேன்
முத்து மாலையாக்கிக் கொண்டேன்
வண்ணம் கெடாத மேகங்களே ஏன் வானில் காய வேண்டும்
எந்தன் சேலை ஆக வேண்டும்

ஆஆ...துள்ளி வரும் ஆற்றோடு தோணிகளில் நான் ஆட
தள்ளிவிடும் காற்றோடு தோப்புகளில் நான் ஓட
ஆ...ஹா அன்புதான் நம் பாதை எங்கும் பூத்திருக்கு

குயில்கள் எந்தன் தமிழை கேட்டன தத்தோம் தகதோம்
உலகம் கேட்க கூவச்சொன்னேன் தித்தோம் திகிதோம்
மயில்கள் எந்தன் சாயல் கேட்டன தத்தோம் தகதோம்
மழையில் விரிக்க தோகை கேட்டேன் தித்தோம் திகிதோம்
மாலை நேரம் மெல்ல மாறிப்போனது தத்தோம் திகிதோம்
மயக்க போர்வையில் சாய்ந்து கொண்டது தித்தோம் திகிதோம்
துணையாக தூங்க இரவும் வந்தது
தித்தோம் திகிதோம் திகிதோம் திகிதோம்

என்னையும் உன்னையும் ஏன் பிரித்தார்
இடையினில் கோடுகள் ஏன் கிழித்தார்
கனவுகள் புகையென ஆனதேன்
காற்றில் சேர்ந்தே போனதேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.