உயிரே உயிரே நலம் பாடல் வரிகள்

Movie Name
Iniavaley (1998) (இனியவளே)
Music
Deva
Year
1998
Singers
Hariharan, Swarnalatha
Lyrics
Vairamuthu
ஆண்: உயிரே உயிரே நலம் தானா ?
சம்மதம் தானா ? நிஜம் தானா? நிம்மதி தானா?
அழகே நிலவின் முதுகில் கவிதை எழுதி
ரசித்திடவா ...

பெண்: உயிரே உயிரே எனை நானே தந்து விட்டேனே
தொடுவானைத் தொட்டுவிட்டேனே
அன்பே நிலவைப் பிடித்து உயிரை மடித்து
கொடுத்திடவா...

ஆண்: உயிரே உயிரே ...

ஆண்: மூச்சுவிடும் தாஜ்மஹாலை நான் பார்க்க
விட்டு விட்டு தாமரைகள் தான் பூக்க

பெண்: மச்சம் மட்டும் தொட்டுக் கொள்ள நீ கேட்க
மிச்சயிடம் கோபப்பட்டு தான் பார்க்க

ஆண்: மின்மினியே இதோ இதோ தான்
கண்களும் பேசும் காதல் விழா தான்
சந்தனமே இதோ இதோ தான்
குங்குமம் பூசும் காதல் விழா தான்

பெண்: என் ஜீவனே ..... என் ஜீவனே....
உன் பார்வையின் போதையில் நான்
அழவே

ஆண்: உயிரே உயிரே குடை தேடி அலைந்தேனே
உன்னை மூடி நனைந்தேனே
அன்பே கனவை அழைத்துப் பரிசுக் கொடுத்து
அனுப்பிடவா ....

பெண்: உயிரே உயிரே

பெண்: சின்ன சின்ன கன்னக்குழி தேனூட்ட
உள்ளுக்குள்ளே உன்னைத் தள்ளி தாழ்பூட்ட

ஆண்: அடிக்கடி தொட்டுக்கொள்ளும் இமைப் போலே
சத்தமின்றி சந்திக்கணும் இனிமேலே

பெண்: வண்டினமே இங்கே இங்கே தான்
மொட்டுகள் கூசும் நெருங்கி வராதே
செவ்விதழே இங்கே இங்கே தான்
முத்தங்கள் வேணும் உறங்கிவிடாதே

ஆண்: என் ஜீவனே... என் ஜீவனே...
கிறங்கிய விழிகளில் இளம்பிறை பார்த்தேன்

உயிரே உயிரே உனைத்தானே உணர்வேனே
உடைப்போலே அணிந்தேனே
அன்பே நீண்ட பகலில் கூந்தல் இரவில்
மறைத்திடவா...

ஆண்: உயிரே உயிரே ...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.