தேர் கொண்டு சென்றவன் பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Enakkul Oruvan (1984) (1984) (எனக்குள் ஒருவன்)
Music
Ilaiyaraaja
Year
1984
Singers
P. Susheela
Lyrics
Vairamuthu
தேர் கொண்டு சென்றவன் யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
தேர் கொண்டு சென்றவன் யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
காண வெண்டும் தலைவனை
காயவில்லை தலையணை
தேட வெண்டும் எந்தன் ஜீவனை

தேர் கொண்டு சென்றவன் யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
எந்தன் தோழி ஆஆஆஆஆஆஆஆ

பொட்டு வைத்தான் பூவை கொண்டு சுட்டு வைத்தான்
தொட்டு வைத்தான் பெண்மைக்குள்ளே இட்டு வைத்தான்
பொட்டு வைத்தான் பூவை கொண்டு சுட்டு வைத்தான்
தொட்டு வைத்தான் பெண்மைக்குள்ளே இட்டு வைத்தான்

என்ன ஒரு வேதனை பத்து விரல் சோதனை
தேனாற்றில் பாலோட நான் என்ன வாதாட
கண் விழித்த காலை வேளை காணவில்லையே

தேர் கொண்டு சென்றவன் யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
எந்தன் தோழி ஆஆஆஆஆஆஆஆ

ஊமைத் தென்றல் வந்து என்னை கொல்கிறதே
கண்களிலே உப்பு மழை பெய்கிறதே
ஊமைத் தென்றல் வந்து என்னை கொல்கிறதே
கண்களிலே உப்பு மழை பெய்கிறதே
உள்ளம் தொட்ட மன்மதா என்னை விட்டு செல்வதா
உன் சேதி வாராதா உள் நெஞ்சம் ஆறாதா
இந்த ஒலி நிலவை பார்த்து கைகள் நீட்டுதா ஆஅ

தேர் கொண்டு சென்றவன் யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
காண வெண்டும் தலைவனை
காயவில்லை தலையணை
தேட வெண்டும் எந்தன் ஜீவனை

தேர் கொண்டு சென்றவன் யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
எந்தன் தோழி ஆஆஆஆஆஆஆஆ