உண்மை ஒருநாள் பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Lingaa (2014) (லிங்கா)
Music
A. R. Rahman
Year
2014
Singers
Haricharan
Lyrics
Vairamuthu
உண்மை ஒருநாள் வெல்லும்
இந்த உலகம் உன் பேர் சொல்லும்
அன்று ஊரே போற்றும் மனிதன்
நீயே நீயடா நீயடா
பொய்கள் புயல் போல் வீசும்
ஆனால் உண்மை மெதுவாய்ப் பேசும்
அன்று நீயே வாழ்வில் வெல்வாய்
கலங்காதே கலங்காதே கரையாதே

ராமனும் அழுதான் தர்மனும் அழுதான்
நீயோ அழவில்லை உனக்கோ அழிவில்லை
ஆணியாகப் பிறந்தாய்
உனக்கு அடிகள் புதிதில்லை
கலங்காதே கலங்காதே கரையாதே

சிரித்து வரும் சிங்கமுண்டு
புன்னகைக்கும் புலிகளுண்டு
உரையாடி உயிர் குடிக்கும் ஓநாய்கள் உண்டு

பொன்னாடை போர்த்திவிட்டு
உன்னாடை அவிழ்ப்பதுண்டு
பூச்செண்டில் ஒளிந்திருக்கும் பூநாகம் உண்டு

பள்ளத்தில் ஓர் யானை வீழ்ந்தாலும்
அதன் உள்ளத்தை வீழ்த்தி விட முடியாது

சுட்டாலும் சங்கு நிறம் எப்போதும் வெள்ளையடா
மேன் மக்கள் எந்நாளும் மேன் மக்கள் தானே

கெட்டாலும் நம் தலைவன்
இப்போதும் ராஜனடா
வீழ்ந்தாலும் வள்ளல் கரம் வீழாது தானே

பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும்
அவன் புன்னகையைக் கொள்ளையிட முடியாது

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.