என் மேல் விழுந்த பாடல் வரிகள்

Movie Name
May Madham (1994) (மே மாதம்)
Music
A. R. Rahman
Year
1994
Singers
K. S. Chithra
Lyrics
Vairamuthu
என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன் (என் மேல்)

மண்ணைத் திறந்தால் நீரிருக்கும் - என்
மனதைத் திறந்தால் நீயிருப்பாய்
ஒளியைத் திறந்தால் இசை இருக்கும் - என்
உயிரைத் திறந்தால் நீயிருப்பாய்
வானம் திறந்தால் மழை இருக்கும் - என்
வயதைத் திறந்தால் நீயிருப்பாய்
இரவைத் திறந்தால் பகல் இருக்கும் - என்
இமையைத் திறந்தால் நீயிருப்பாய் (என் மேல்)

இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கடலும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ
மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
காற்றும் மலையும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமை ஆய்விடுமோ (என் மேல்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.