சந்தோஷம் சந்தோஷம் பாடல் வரிகள்

Last Updated: Sep 29, 2023

Movie Name
Youth (2002) (யூத்)
Music
Mani Sharma
Year
2002
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vairamuthu
சந்தோஷம் சந்தோஷம் வாழ்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லை என்றால் மனிதர்க்கு ஏது பலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு

சந்தோஷம் சந்தோஷம் வாழ்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லை என்றால் மனிதர்க்கு ஏது பலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு

வெற்றியை போலவே ஒரு தோல்வியும் நல்லதடி
வேப்பம்பூவிலும் சிறு தேன் துளி உள்ளதடி
குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி
இழையும் புண்ணகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி
தவறுகள் பண்ணி பண்ணி திருந்திய பிறகுதான் நாகரிகம் பிறந்ததடி
தவறுகள் குற்றம் அல்ல சரிவுகள் வீழ்ச்சி அல்ல பாடம்படி பவளக்கொடி
உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பை தொட்டி இல்லை
உள்ளம் என்பது பூந்தொட்டி ஆனால் நாளை துன்பம் இல்லை

புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு

ஆதியில் ஆண்டவன் இந்த பூமியை படைத்தானே
அவன் ஆசையை போலவே இந்த பூமி அமையலையே
ஆண்டவன் ஆசையே இங்கு பொய்யாய் போய்விடில்
மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா
நன்மை என்றும் தீமை என்றும் நாலு பேர்கள் சொல்லுவது நம்முடைய பிழை இல்லையே
துன்பமென்ற சிப்பிக்குள் இன்பமென்ற முத்து வரும் துனிந்த பின் பயம் இல்லையே
கண்ணீர் துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டுகொள்
காலுக்கு செருப்பு எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல்

புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு

சந்தோஷம் சந்தோஷம் வாழ்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லை என்றால் மனிதர்க்கு ஏது பலம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.