யாரோ யாரோடி பாடல் வரிகள்

Movie Name
Alaipayuthey (2000) (அலைபாயுதே)
Music
A. R. Rahman
Year
2000
Singers
Mahalakshmi Iyer
Lyrics
Vairamuthu
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்

ஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க
அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு
சந்தனப் பொட்டழகை சாஞ்ச நடையழகை
வெளி வேட்டி கட்டியவனோ சொல்லு

யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்

தங்கத்துக்கு வேர்க்குது பாருங்க பாருங்க
சாந்து கண்ணும் மயங்குது ஏனுங்க ஆ
முத்தழகி இங்கே இல்லீங்க சொல்லுங்க
முத்தமிட்டு எங்கே தொடுங்க
மொத்தமாக சொல்லிக் குடுங்க
சொல்லிக் குடுங்க குடுங்க குடுங்க குடுங்க
கன்னிப் பொண்ணு நல்லா நடிப்பா அவ நடிப்பா
கட்டிலுக்குப் பாட்டுப் படிப்பா

யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
ஆத்தி அவந்தாண்டி உன் திமிருக்கு அரசன்
ஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க
அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு
மல்லு வேட்டி கட்டி வந்த சல்லிக்கட்டு மாட்ட முட்டி
மல்லியப்பூ வெல்லப்போவுதடி நில்லு

...
கண்ணாலம் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம் (3)
கண்ணாலம்...கண்ணாலம்...பூங்கொடிக்குக் கண்ணாலம்...பூங்கொடிக்குக் கண்ணாலம்

பொன் தாலி பொண்ணுக்கெதுக்கு எதுக்கு
மூணு முடி போடுவதெதுக்கு...ஆ
உரிமைக்காக ஒத்த முடிச்சு
உரிமைக்காக ஒத்த முடிச்சு அடியே
உறவுக்காக ரெண்டாம் முடிச்சு
ஊருக்காக மூணாம் முடிச்சு
முடிச்சு...முடிச்சு முடிச்சு முடிச்சு
பொன் தாலி பொண்ணுக்கெதுக்கு எதுக்கு
மூணு முடி போடுவதெதுக்கு

யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.