எவனோ ஒருவன் பாடல் வரிகள்

Movie Name
Alaipayuthey (2000) (அலைபாயுதே)
Music
A. R. Rahman
Year
2000
Singers
Vairamuthu
Lyrics
Vairamuthu
எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

தவம்போல் இருந்து யோசிக்கிறேன்

அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்தவம்போல் இருந்து யோசிக்கிறேன்

அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்

கேட்பதை அவனோ அறியவில்லை

காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே

அவன் ஊதும் ரகசியம் புரியவில்லைஎவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்புல்லாங்குழலே! பூங்குழலே!

நீயும் நானும் ஒரு ஜாதிபுல்லாங்குழலே! பூங்குழலே!

நீயும் நானும் ஒரு ஜாதிஎன் உள்ளே உறங்கும் ஏக்கத்திலே

உனக்கும் எனக்கும் சரிபாதிகண்களை வருடும் தேனிசையில்

என் காலம் கவலை மறந்திருப்பேன்

இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான்

என்றோ என்றோ இறந்திருப்பேன்!எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்உறக்கம் இல்லா முன்னிரவில்

என் உள்மனதில் ஒரு மாறுதலாஉறக்கம் இல்லா முன்னிரவில்

என் உள்மனதில் ஒரு மாறுதலாஇரக்கம் இல்லா இரவுகளில்

இது எவனோ அனுப்பும் ஆறுதலாஎந்தன் சோகம் தீர்வதற்கு

இதுபோல் மருந்து பிறிதில்லையேஅந்தக் குழலை போல் அழுவதற்கு

அத்தனை கண்கள் எனக்கில்லையேஎவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.